கலைஞரின் சட்டமன்ற உரைகள்
87
போலிச் சீட்டுகளுடன் ஒரு டாக்சியில் செல்லும்போது கைது செய்திருக்கிறார்கள் புதுப்பேட்டை லாங்க்ஸ் கார்டன் சாலையில் உள்ள பான்சி ஆர்ட் காட்டேஜ் என்ற அச்சகத்தையும் சோதனையிட்டு அதிலிருந்து 500 காலிச் சீட்டுக்களையும், மற்றும் அச்சு சாமான்களையும் கைப்பற்றி யுள்ளார்கள். கைதான பெருமாள் இப் போலிச் சீட்டுகளை வண்ணாரப்பேட்டைப் பகுதியில் விநியோகம் செய்ததாகத் தெரிகிறது. அவை யாவும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது காவல் துறையினரின் மற்றொரு அபார சாதனையாகும்.
முகமூடித் திருடர்கள் வட பகுதியில் இருந்துவந்து தமிழ் நாட்டிலும், குறிப்பாக சென்னை நகரிலும் மிகத் துணிகரமாகக் கொள்ளை அடித்தார்கள். நமது காவல்துறையினர் அவர்கள் கொள்ளையிட்டுச் சென்ற இடத்தில் சாதாரண தடையங்களைக் கண்டு அவற்றின் மூலமாகவே அவர்களைக் கண்டுபிடித்திருக் கிறார்கள். கொள்ளை அடிக்கப்பட்ட இடத்தில் கிடந்த பீடித் துண்டுகளைப் பார்த்து அவை தமிழ் நாட்டில் தயாரிக்கப்பட்டவை அல்ல, வடநாட்டைச் சேர்ந்தவை, அதுவும் எந்த நாட்டைச் சேர்ந்தது என்று கண்டு அவர்களைத் தொடர்ந்து சென்று சான்சியர் பதினைந்து பேர்களையும் அவர்களுடைய தலைவன் கங்குவையும் கைதுசெய்து வழக்குத் தொடர்ந்தார்கள். கொள்ளை அடிக்கப்பட்ட பல்வேறு சொத்துக்கள் மீட்கப்பட்டன. வழக்கு நடைபெற்று அந்த சான்சியர் ஆறு பேர்களுக்கு ஏழாண்டுக் கடுங்காவல் தண்டனையும், பத்துப் பேர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது.
இதைப் போலவே சுருள் கதவுகளை உடைத்து கடைகளை எல்லாம் கொள்ளை அடித்து வந்த ஒரு கும்பலையும் நமது காவல் துறையினர் கண்டுபிடித்தார்கள். அதுவும் ஓர் இரவு மதுரையிலே ஒரு துணிக் கடையின் சுருள் கதவுகளை ள் உடைத்துக்கொண்டிருக்கும்போது நமது காவலர் பிடியில் அவர்கள் வசமாய்ச் சிக்கிக்கொண்டார்கள். இவர்கள் நம் மாநிலத்தில் மாத்திரம் இல்லாது ஆந்திரா, மைசூர் ஆ கிய மாநிலங்களிலும் தங்கள் கொள்ளையை திறம்பட நடத்தியிருக் கிறார்கள். தமிழகத்தில் இவர்களைப் பிடித்தது நம் காவல்துறையின் சாதனையாகும்.