88
—
காவல்துறை பற்றி
அதைப்போலவே திரு. ஹாண்டே அவர்கள் குறிப்பிட்டார்கள். திரு. அரங்கநாதன் அவர்களும் தம் பேச்சில் குறிப்பிட்டார்கள் தமிழ்நாட்டில் எங்கெங்கே நக்சல்பாரிகளின் டுறுவல் இருக்கிறது என்பதை நமது காவல்துறையினர் மிகுந்த கண்காணிப்போடு பார்த்து வந்தார்கள். உங்களுக்குத் தெரியும். பெண்ணாடத்தில் நடந்த நிகழ்ச்சி உண்மையில் அலட்சியப் படுத்தக்கூடியது அல்ல. ஒரு மாணவரும், மற்ற இருவரும் வெடி குண்டுகள் தயாரிக்கிற நேரத்தில் தயாரிக்கப்படுகிற வெடிகுண்டுகள் வெடித்ததன் காரணமாக அவர்கள் அந்த இடத்திலேயே இறந்திருக்கிறார்கள். அது வெளியே தெரிந்தால் அவர்கள் நடத்துகின்ற சதி வெளிப்பட்டுவிடும் என்பதற்காக ஆழமாகக் குழி தோண்டி அதற்குள்ளேயே அவர்களது சடலங்கள் புதைக்கப்பட்டுவிட்டன. நமது காவல்துறையினர் அந்த இடத்தையும் கண்டுபிடித்து குழியைத் தோண்டி சவத்தை எடுத்திருக்கிறார்கள். தலைமறைவாக இருக்கிற ஒருவர் இது சம்பந்தமாகத் தேடப்பட்டு வருவதும் உங்களுக்குத் தெரியும்.
ஆந்திரத்தைச் சேர்ந்த நாகிரெட்டியின் தலைமையில் இருந்த ஒரு கூட்டம் சென்னையில் சிக்கினார்கள் என்பது முன்பே தெரியும். அவர்கள் சென்னையில் தங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்து அவர்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களுக்குத் தெரியாமலேயே பின்தொடர்ந்து சென்று, இரவிலே அவர்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றி அவர்கள் கட்டிவைத்திருந்த நாய்களுக்கிடையே, மாடுகளுக்கிடையே, மாட்டுத் தொழுவத்தில் சாணத்திடையே ஒளிந்து நின்று இரவு 3 மணிக்கு பெரும் கூட்டமாகச் சுற்றி வளைத்து அப்படிச் சுற்றி வளைக்கிற நேரத்தில் இருட்டாக்க அவர்கள் விளக்கை அணைத்தபோது, தாங்கள் கொண்டு சென்றிருந்த ஒளிமிக்க விளக்குகளினால் ஒளியை ஏற்படுத்திக்கொண்டு அவர்களைக் கைது செய்திருப்பது மிகமிகப் பாராட்டுக்குரியதாகும். இதை அனைவரும் நன்கு அறிவீர்கள்.
—
முதலமைச்சருடைய விருது என்ற பெயரால் அண்ணா அவர்கள் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் நாளன்று ஒவ்வொரு ஆண்டும் வீரப் பதக்கங்களையும் சிறப்புப் பதக்கங்களையும் காவல்துறையினருக்கு வழங்கவேண்டும் என்று சென்ற ஆண்டு இந்தக் காவல்துறை மான்யத்தினுடைய விவாதத்தில் அறிவிக்கப்