பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

காவல்துறை பற்றி

நம்முடைய மாண்புமிகு உறுப்பினர்கள் இங்கே சொன்னார்கள் சில புகார்களை. நான் அந்தக் கருத்துக்களை எல்லாம் இல்லை என்று அவர்களுக்காக வக்காலத்து வாங்கிப் பேச விரும்பவில்லை, ஏனென்றால் ஏறத்தாழ 30 ஆயிரம் பேரைக் கொண்டுள்ள இந்தத் துறையில் சிலபேர் தவறு புரிபவர்களாக இருக்கலாம். நான் இல்லை என்று கூறவில்லை. இதில் சிறிய தவறுகள் இருக்கலாம். பெரிய தவறுகளை சிலர் புரிந்து இருக்கலாம். அவர்களை எல்லாம் யார் யார் என்று இந்த ஓராண்டு காலத்தில் நான் அறிந்து வைத்திருக்கிறேன். காவல் துறையில் இருக்கின்ற புலன் ஆய்வு செய்கின்ற அந்த அளவுக்கு மேல் இல்லாவிட்டாலும் அந்த அளவுக்காவது நான் இவைகளை எல்லாம் அறிந்து வைத்திருக்கிறேன். நான் இந்த அவையின் மூலம் அந்தத் தவறுகளைச் செய்கின்ற காவல்துறையினருக்கு எச்சரிக்க விரும்புகிறேன். அவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்களே யானால் அதிக அளவுக்கு தண்டனை நிச்சயமாகப் பெறுவார்கள் என்பதை அவர்களுக்குக் கூறிக்கொள்கிறேன். ஆகவே இப்படி நாட்டுக்கு, சமுதாயத்திற்கு, மக்களுக்கு கடமையாற்றுபவர்களாக உயிர் இழக்கின்ற இழக்கின்ற மாரிமுத்துகளும் இருக்கின்றார்கள், சங்கரநாராயணன்களும் இருக்கிறார்கள், அதே நேரத்தில் தவறு செய்கின்றவர்களும், அவர்களுக்குத் அவர்களுக்குத் துணைபோகின்ற கயவர்களும் இந்தத் துறையில் இருக்கிறார்கள் என்பதை நான் அறியாமல் இல்லை, இந்த அரசும் அறியாமல் இல்லை, அவர்கள் மீது நிச்சயமாக இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். அதிலே சந்தேகம் இல்லை என்பதை இந்தச் சபைக்கு உறுதியோடு கூறிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நம்முடைய நண்பர் மார்ட்டின் அவர்கள் சொன்னார்கள், சிட்டி போலீசுக்கு சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு நிதி ஒதுக்கியதைக் குறைந்துவிட்டார்கள் என்று. அதைச் சொல்லிவிட்டு சிட்டி போலீஸ் விபசாரக் குற்ற வழக்குகளை வாபஸ் வாங்கிவிட்டது. இதற்குப் பெயரா சிட்டி போலீஸ் என்றார்கள். அந்தக் குற்றங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தால் அர்த்தம் உண்டு. உடுப்புக்காக சென்ற ஆண்டு 5,25,000 ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு 5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகப்படியாகத் தேவைப்பட்டால் அரசு மறுபடியும் அதைக் கொடுக்கும். இன்றியமையாததைக் குறைக்கவில்லை. அடுத்தபடியாக ரூபாய் 5,000 இந்த ஆண்டும்