94
காவல்துறை பற்றி
காவல்துறையினர் கண்காணிப்பாக இருந்து பிடித்து வருகிறார்கள் என்பதற்காகப் பாராட்டவேண்டும். இந்த மூன்று லட்சம் பேர்களும் குற்றம் செய்தவர்களா இல்லையா என்றால் செய்தார்கள் என்பதை மறுக்கவில்லை. திங்கட்கிழமை செய்தவர் செவ்வாய்க் கிழமை
தூய்மையாக இருப்பார். எந்தத்தவறான பொருளிலும் நான் சொல்லவில்லை. ஆகவே செவ்வாய்க்கிழமை போகிற நேரத்திலே அகப்பட்டுக்கொள்வதில்லை. தூய்மைக்கு முன்பாக நான் சொன்ன அந்த வார்த்தையை நீக்கிவிடவேண்ம் தவறி வந்துவிட்டது அந்த வார்த்தையை நீக்கிவிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
- * *
-
வாய்
மாண்புமிகு பேரவைத் தலைவர் : பேரவையின் குறிப்பேட்டிலிருந்து அந்த வார்த்தையை நீக்கிவிடவேண்டும். பத்திரிகைகளும் அதை வெளியிட வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : அப்படிப்பட்ட நிலைமையில் எவ்வளவு வருமானத்தை இழக்கக்கூடிய சூழ்நிலையிலும் மதுவிலக்குக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆனாலும் மதுவிலக்கை ரத்து செய்வதில்லை என்ற முடிவில் இந்த அரசு இருக்கிறது என்பதை அனைவரும் அறிவார்கள். சென்ற ஆண்டு இது கேள்விக் குறியாகக் கிளம்பி, கொஞ்சங்கொஞ்சமாக வளர்ந்து நாட்டிலே உள்ள எல்லாப் பத்திரிகைகளும் கார்டூன்களுக்காக கேள்விக்குறியைப் பயன்படுத்தி, காந்தி நூற்றாண்டு விழா நேரத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக் கிறது. முற்றுப் புள்ளிக்குக் கீழே ஒரு கோடு இழுத்தால் அது கமா ஆகிவிடும். முற்றுப்புள்ளி வைத்தால் கமா ஆகாது என்று சிலர் நினைக்கிறார்கள். அப்படி ஆகாமல் இருக்கின்ற முறையிலே மத்திய அரசு மதுவிலக்கைத் தீவிரப்படுத்துகின்ற அரசுக்கு உதவிகளை பரிசுத் தொகைகள் வடிவத்தில் அளிப்பார்களானால் மதுவிலக்குத் திட்டத்திலே ஒவ்வொரு மாநிலமும் சிரத்தை காட்டமுடியும். தமிழகத்திற்கு அதற்காகத் தருகிறார்கள் என்றால் அடுத்து அடுத்து மற்ற மாநிலங்களும் தமிழகத்தைப் பின்பற்றுவதற்கு முன்வரக் கூடும்.
மாண்புமிகு பேரவைத் தலைவரின் ஆணைக்கிணங்க
அகற்றப்பட்டது.