96
காவல்துறை பற்றி
காலையிலே பத்திரிகையில் பார்த்தால் இல்லத்தரசிகள் இதற்காகக் கிளர்ச்சி செய்வார்கள் என்று போட்டிருக்கிறார்கள். கிளப்களிலே பெர்மிட்டைப் பயன்படுத்திச் சீமைச்சரக்கை வாங்கி அங்கேயே உட்கார்ந்து குடிக்கக்கூடாது என்று அரசு உத்திரவு பிறப்பித்திருக்கிறது. காந்தி நூற்றாண்டு விழாவில் இந்த அறிவிப்பைச் செய்தேன். ஏழை எளியவர்கள் குடிக்கிறார்கள் என்றால் பிடிக்கப்படுகிறார்கள். ஆனால் செல்வச் சீமான்கள் கிளப்களிலே உட்கார்ந்து பெர்மிட்டைப் பயன்படுத்தி அங்கேயே உட்கார்ந்துகொண்டு குடிக்கிறார்கள் என்பது சமதர்ம நாட்டில், சோஷலிச நாட்டில் ஒத்துவராது என்ற காரணத்தினாலே 20 ஆண்டுகளாக அனுமதிக்கப்பட்டிருந்த ஜனநாயக சோஷலிசத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த முறை நம்முடைய சோஷலிசத்திலே அனுமதிக்கப்படக்கூடாது என்ற முடிவை எடுத்தோம். அந்த முடிவிற்கேற்ப கிளப்களிலே அயல்நாட்டார், அயல்நாட்டுத் தூதரகத்தைச் சேர்ந்த அயலார், தற்காலிகமாக வரும் அயல்நாட்டார், மற்ற மாநிலத்தார், ராணுவம், கப்பற்படை, விமானப்படையைச் சேர்ந்தவர்கள் பெர்மிட்டைப் பயன்படுத்தி அங்கேயே உட்கார்ந்து சாப்பிடலாம், மற்றவர்கள் அங்கேயே உட்கார்ந்து சாப்பிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது வீட்டு அரசிகள் எங்களுடைய கணவர்கள் அங்கேயே உட்கார்ந்துகொண்டு சாப்பிடலாம், 'வீட்டில் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு அந்தப் பழக்கம் வந்துவிடும்' என்று நினைத்தால் குழந்தைகளைத் தூங்கவைத்துவிட்டு கணவனை மாடிக்கு அழைத்துச் சென்று குறைவாகச் சாப்பிட்டால்தான் நல்லது என்று தனக்கு அந்தப் பழக்கம் வரக்கூடாது, தன்னைப் பேணிக் காக்கின்ற துணிவு உள்ள பெண் டாக்டர் இவ்வளவுதான் குறிப்பிட்டுள்ளார், 4 யூனிட்கள்தான் சாப்பிடவேண்டும், அதற்கு மேலே சாப்பிடக்கூடாது என்று சொல்வார்களானால் நல்லது. கிளப்களுக்குச் சென்று குடிக்கவேண்டுமென்று அவர்களே கிளர்ச்சி செய்ய மாட்டார்கள், ஆனால் வீரத் தாய்மார்கள் இதற்காக கிளர்ச்சி செய்வது வேடிக்கையாக இருக்கிறது, பத்திரிகைகளிலே அரசாங்கம் செய்கிற நல்ல காரியங்களைப் பெரிய அளவிலே போடாவிட்டாலும் தாய்மார்கள் கிளர்ச்சி என்பதைப் பெரிய அளவிலே போடுகின்றன. உங்களுடைய கணவன் குடிப்பது அளவுப்படி இருக்கவேண்டுமென்றால் இருதய நோயிலிருந்து
-