பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

97

உண்மையிலேயே பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் வீட்டிலே அமர்ந்து குடிக்கச் செய்தால் அவர்கள் கெட்டுப்போவதற்கு வழியில்லை கிளப்களிலே அவர்கள் குடிக்க அனுமதித்தால் அங்கே மற்றவர்கள் எனக்குப் போதும் நீ கொஞ்சம் குடி என்று சொல்வார்கள், அவர்கள் கெட்டுப்போவார்கள். ஆகவே கிளர்ச்சி செய்கின்ற தாய்மார்களை இங்குள்ளவர்களையல்ல - வெளியிலே கிளர்ச்சி செய்கின்ற தாய்மார்களை நான் கேட்டுக்கொள்வது வீட்டிலேயே உட்கார்ந்து அளவோடு குடிக்கச் செய்வதுதான் நல்லது என்பதால் அவ்வாறு அவர்கள் செய்யலாம்.

ஏனைய

போலீஸ் ஸ்டேஷன்களிலே அடைக்கப்படுகின்ற கைதிகள் தற்கொலை செய்துகொள்ளுகிறார்கள். அடிக்கப்பட்டுச் செத்தார்கள் என்ற புகார்கள் அடிக்கடி வந்துகொண்டிருக்கின்றன. இந்த ஆண்டைப் பொறுத்தவரை அந்தக் கணக்கு குறைந்திருக்கிறது என்று கருதுகிறேன். ஐ.ஜி. அவர்களுடனும் அதிகாரிகளுடனும் பேசி ஒரு முடிவை எடுத்திருக்கிறேன். போலீஸ் ஸ்டேஷன்களில் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று கூறி போலீசார் தப்பித்துக்கொள்ளுகிறார்கள் என்பதாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி, அதற்கு இடம் இல்லாத அளவுக்கு ஸ்டேஷன்களில் இருக்கும் கைதிகளை அடைக்கும் இடங்களில் ஜன்னல் கம்பி இல்லாத அளவுக்கு, துணியையோ, கயிரையோ கட்டுவதற்கு வசதி இல்லாத நிலையில், குறுக்குக் கம்பி இருந்தால் மிக உயரத்தில் வைக்க வேண்டுமென்ற நிலையில், நிச்சயமாக அந்தக் கைதிகள் தற்கொலை செய்து கொண்டிருக்க முடியாது, தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இல்லை என்ற அளவுக்குக் கட்டடங்களை மாற்றியமைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். அந்த வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மாலை ஆறு மணிக்கு மேல் தனிப்பட்ட பெண் குற்றத்திற்காகச் சிறைப் பிடிக்கப்பட்டால் போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருக்கக்கூடாது, சப்-ஜெயிலுக்கு அனுப்பிவிட வேண்டுமென்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் சில தவறுகள் குறைக்கப்பட ஏதுவாக இருக்கும். அந்த முறையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.