பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

காவல்துறை பற்றி

சென்னை நகரைப் பொறுத்தவரை ஆறு காவல்துறை வேன்கள் இருந்துகொண்டிருக்கின்றன. மேலும் ஆறு காவல்துறை வேன்கள் சாங்ஷன் செய்யப்பட்டிருக்கின்றன. 12 வேன்களும் 12 தொகுதிகளில் சென்னை நகரத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் இரவு பகல் எந்நேரமும். அதிலே சப் இன்ஸ்பெக்டரோ அல்லது காவல்துறையைச் சேர்ந்த ஒருவரோ இருப்பார். தீ விபத்துக்கள், சிறு சிறு குற்றங்கள் ஆங்காங்கு நடைபெறாதவாறு 12 வான்களையும் பயன்படுத்த முடியும். அதுவும் இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டிருக்கிறது

சென்ற ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, காவலர் க்ஷேமநல நிதிக்கு அதிகபட்சம் ரூ. 50,000 என்று இருந்ததை ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 1 இலட்சம் என்று அதிகரிப்பதாக அறிவித்தேன். அது அமலுக்கு வந்திருக்கிறது. காவலரின் வீடுகளுக்கு மாதம் ஒன்றுக்கு 10 யூனிட் மின்சாரம் என்று இருந்ததை 20 யூனிட்டுகளாக ஆக்குவதற்கு உத்தரவு பிறப்பித்து இன்று அமலில் இருக்கிறது. சிறந்த சேவைக்கும், வீரச் செயல்களுக்கும் முதலமைச்சர் பதக்கம்' வழங்குவதுபற்றிக் கூறியதும் இன்று அமலில் இருக்கிறது. காவலர்களுக்கு ரூ. 15 லட்சத்தில் வீடு கட்டித் தரப்படும் என்ற உறுதிமொழியும் இன்று அமலாக்கப்பட்டிருக்கிறது.

இன்று காலையில் பேசிய பலரும் குறிப்பிட்டார்கள். நம்முடைய அரங்கநாதன் அவர்களும், கணேசன் அவர்களும், எதிர்த்தரப்பில் பேசிய பலரும் பேசிய நேரத்தில், கிராமங்களில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு மோட்டார் சைக்கிள் வேண்டுமென்று சொன்னார்கள். அவர்களுக்கே மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொடுப்பதைவிட, ஐந்து ஆண்டுகளில் இருக்கக்கூடிய எல்லா போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் மோட்டார் சைக்கிள் வாங்கிக்கொடுப்பது என்ற வகையில் முதற்படியாக இந்த ஆண்டு 100 கிராமங்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். (ஆரவாரம்).

கிராமங்களில் உள்ள போலீஸ்காரர்கள் தங்கள் பணியைப் புரிவதற்கு சைக்கிள்கள் தேவை என்ற கோரிக்கையைத் தெரிவித்தார்கள். போலீஸ் கமிஷன் அறிக்கை வருவதற்கு