பக்கம்:காவியக் கம்பன்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 அங்கே கம்பனில்லை. கணவனில்லை. கவிஞன் இருந்தான். அவன் கரத்தில் எழுத்தாணி எழுதி எழுதி பழுத்திருந்தது. திரு விளக்கின் ஒளிச்சுடரை துாண்டி விட்டாள் எரியும் பந்தத்துக்கு எண்ணெயிட்டாள் அருகிலமர்ந்தாள் அப்போதும் அவனில்லை. ந்ெதனை சிறகடித்து எங்கோ பறந்திருந்தான் ,ெ றிக் கிடந்த ஏடுகளை அடுக் கினன். இயற்றிக் கிடந்த கவிதைகள் சிரித்தன. இராமகதை பிறந்த கதையைக் கண்டாள் காவியச் சோலையிலே கமல வல்லி புகுந்தான் கதை பிறந்தது விடுகின்ற மூச்செல்லாம் நமோ நாராயணுய கட்டுகின்ற சுதி எல்லாம் நமோ நாராயணுய என்றுலகை வலம் வரும் நாரத முனிவன் வால்மீகியின் தவஞானக் குடிலுக்கு வந்தார். வந்தனை வழி பாடு முடிந்தபின்னர் ஞானிகளின் பேச்சில் ஒரு கேள்வி பிறந்தது . சகல குனங்களும் பொருந்திய சான்ருேன் சரித் திர நாயகன் வணக்கத்துக்குரியவன் மனிதப் பிறப்பில் கண்டதுண்டோ என வினயமுடன் வால்மீகி நாரதரை வினவினர் நாரதர் தவத்தில் வலியவர் உன்னைப்போல் பலருண்டு தவறு பொறுப்பதில்லை. தனித்து ஒதுங்குவார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியக்_கம்பன்.pdf/27&oldid=796808" இலிருந்து மீள்விக்கப்பட்டது