பக்கம்:காவியக் கம்பன்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 கிழவர் ஆற்றல் மிக்கவன் அவதார புருஷன் ராமநாமம் தாரக மந்திரமென்று முழங்கிய கம்பர் உண்மையை விழுங்கினரோ முடிவில் சிவபூசை செய்ய வைத்ததற்கு வைணவக் கிழவன் வயிறு எரிகின்றேன் என்ருர் கம்பரும் பெரியவரை வணங்கிப் பேசினர் கம்பர் சரித்திர நிகழ்ச்சிகள் சாத்திரப் பரிகாரம் நான் மாற்றுவதற்கு இல்லை அறிவீர் அரியும் அரனும் இருவர் என்ருல் இருவர் ஒருங்ரென்ருல் ஒருவரே உயர்வென்ன தாழ்வென்ன ராமன் தொழத்தெரிந்தவன் -- தொழுவதற்குரியவன் என்பதற்கே ராமலிங்க பூசை என்ருர் சோழன் தடையும் விடையும் கேட்க கேட்க மகிழ்ச்சியே ஆயினும் குறித்த நல் நேரத்தில் அரங்கேற்றி சிறப்பிக்க வேண்டினன் வேந்தன் தாதன் செப்பேடு கல்வெட்டு பட்டயம் என்ருல் அரச முத்திரை பொறிப்பது முறைமை நடப்பது அரசியல் பேரவை அல்ல அறிவியல் அரங்கம் ஆய்வதே நியதி அரசர் குறுக்கிடல் ஆகாதென்ருன் தாதன் அதற்கு மேல் தொடர்ந்தான் புகழேந்தி கா. க.-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியக்_கம்பன்.pdf/51&oldid=796864" இலிருந்து மீள்விக்கப்பட்டது