இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசை பலியாச்சோ? பாலியத்துச் சூதறியாப் பருவம் கழிந்தென்னுள் வாலிபத்துப் புத்துணர்ச்சி வலை வீச, பிஞ்சிளமை நெஞ்சத்துச் சூனியமென் நிறையழிக்க, வாழ்வதனை நஞ்செனவே நான் தினமும் நச்சி வரும் நாளையிலே, ஆவி நிமிர வரும் அமுதத்தை காணாமல் சாவுக் குரலடுத்துச் சஞ்சரிக்கும் வேளையிலே, என்றைக்கோ, எப்போதோ, எனக்கே நினைவில்லா அன்றைக்கு- குன்றெரிந்த வேலவர்தம் கோபுரத்துக் குடவாசல் முன்றிலிலே நின்றிருந்தேன்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/116&oldid=989770" இலிருந்து மீள்விக்கப்பட்டது