இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 அவ்வேளை; சாகா வரமருளும் சஞ்சீவி ஏந்திவந்த மோகினிபோல் வாயிலெனும் மோட்சவழி நீவந்தாய்! வந்தவளை. வரவேற்க வாய் துடிக்க, வாயடைக்க, சிந்தைப் பேருவகை சிந்த, நாமெனைக் கொந்தி வதைசெய்யக் தாலெடுத்தேன்; ஏதேதோ குழறினேன். உள்ளம் படபடக்க, உடம்பெல்லாம் இன்புர வெள்ளம் பெருக்கெடுத்து விம்முற்று மேலோங்க, மெய்வளையத் திட்டமிட்டு மெல்ல உனை அருகி, கைவளையில் விளையாடி;. கண்ணலையில் திளைத்தாடித் தாஜாக்கள் செய்துன்னைத் .. தழுவினேன்; மலர்ந்தொளிரும் ரோஜாப்பூக் கன்னத்தை நசித்தேன்; முத்தமிட்டேன். தோளை மெல்வருடி, தோளணியை மெல விலக்கி, தாளை மெல்ல வருடி, தாடனங்கள் பல விளைத்து, கூந்தல் கதிர் கோதி, கோல் நுதல் நீவி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/120&oldid=989767" இலிருந்து மீள்விக்கப்பட்டது