இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதியென்னும், இனமென்னும், சமயம் என்னும் சச்சரவாம் நச்சரவைத் துணையாய்க் கொண்டு சோதரரைப் பிரித்தாளும் சூழ்ச்சி யாலே சோரங்கள் செய்தெம்மை ஆள வெண்ணும் Bாதகரே! உம்முடைய சூதும் வாதும் பகற்கனலாய், பழங்கதை யாய் முடியும் காலம் பூதலத்தில் பின்னொரு நாள் தோன்றும், தோன்றும்! புடைபுடைக்கும்? பழிவாங்கும்? பொய்யை மாய்க்கும்! 9 -காலமதைக் கண்கொண்டு நீயும் நானும் காணுவதற் கேலாது மக்கள் அந்நாள் சூலமிட்ட காளைகள்போல் முறுக்கித் துள்ளி, சுதந்திரத்தின் கோஷத்தை முழக்கித் தள்ளி, காலமெலாம் தமையடக்கி வாழ்ந்தார் தம்மை ? ' கடல்கடந்த பகற்கொள்ளைக் காரர் உம்மை ஆலமரத் திடிவிழுந்தாற் போன்றே தாக்கி ' .' அரசுகொளும் முரசொலியை அகிலம் கேட்கும்! என்னருமைத் தாயகமே! நாட்டின் செல்வம் எனத் திகழும் இளையவரே! தந்தை மாரே! அன்னையரே! கன்னியரே! மங்கை மாரே! அனைவருக்கும் சிரம்தாழ்த்தி நன்றி சொன்னேன். அன்னியர்தம் ஆதிக்க வேட்டை தன்னை . . அழித்தொழிக்கத் தொடுத்திட்ட உரிமைப் போரின் முன்னணிக்கு நீரளித்த உதவிக் கெல்லாம் - : முடிவுண்டோ ? சொல்லில் அவை முடியப் போமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/37&oldid=989522" இலிருந்து மீள்விக்கப்பட்டது