இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகையினால் பூமியெல்லாம் வளங்கொழித்துப் பொன்விளைக்கும் திருநெல்லைச் சீமையிதன் சிறப்பெல்லாம் ஓர்சிலவே r? நெல்லுக்கு வேலிகட்டி நெல்வேலி நாதரெனும் சொல்லுக்கு இலக்கானார் , சிவனென்று சொலப்படுமோர் நல்லசிறு கதையினையும் நாடறியும்; என்ருலும் நெல்வயல்கள் வேலியென நெருக்கமுறச் சூழ்ந்திருக்கும் நல்விதத்தாப்' நெல்வேலி என்று தமிழ் நாடனைத்தும் சொல்விதத்தைப் பெற்றதெனச் சொன்னாலும் பொருந்தாதோ? சிந்துபூந் துறையுறையும் செல்வரென்று, சம்பந்தர் "எத்தரை வாழ்த்திய சொல் : இன்றைக்கும் பொருந்தாதோ? செல்வருக்குச் செல்வரெனத் திருக்கோயில் கொண்டிருக்கும் நெல்வேலி யப்பனையும் நினையார் இருப்பாரோ? தீரமிர நற் சபைதனிலே சராசரத்தின் தத்துவத்தைச் - srமியவன் கால்தூக்கிச் சதிராடிக் காட்டுகின்ற அம்பலத்துக் கூத்தாட்டை அன்பர்குழாம் கண்டுவிட்டால் தம் பிறவிப் பேறுணர்ந்து தாங்களுமே ஆடாரோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/62&oldid=989562" இலிருந்து மீள்விக்கப்பட்டது