இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேசித்தேன்: நேசிப்பேன்! - ஏசு கிருஸ்துவைப்பற்றிப் பதி னாறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு ஸ்டானியக் கவிதையின். தமிழாக்கம். மூல ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. ஏசுப் பெருமகனே! - எந்நாளும் நானும்தை நேசித்தேன்; நேசிப்பேன்; நேசித்துக் கொண்டிருப்பேன்! பரலோக வாழ்வினுக்குப் பாதையிது என்றே நீர் உரைசெய்தீர் என்பதனால் உள்ளத்தே உமைப்போற்றி வரவில்லை; அஃதேபோல் வாதைதரும், துன்புறுத்தும் தரகுலகின் அச்சத்தால் - நடுக்குற்று; உமக்கெதிராய்த் தீய செயல்பலவும் செய்யாது, நானுலகில் தூய வழி நடக்கத் துணிந்திட்டேன் என்பதிலை! ஏசுப் பெருமகனே! என்ருலும் நானும்மை நேசித்தேன்; நெஞ்செல்லாம் நெகிழ்ந்தும்மை நேசித்தேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/76&oldid=989582" இலிருந்து மீள்விக்கப்பட்டது