பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை - ஆடு மயிலே ! Π ஆடுமயிலே ருடம் ஆடுமயிலே ஆடுங்கலேக் கழகு தேடுமயிலே விண்ணகத்துக் கார்முகிலக் கண்டு மகிழ்ந்தாய் விஞ்சுமெழில் தோகைதனே மெல்ல விரித்தாய் கண்ணிமைக்க நேரமின்றிக் கண்டு மகிழ்ந்தேன் கற்பனையைத் தூண்டிவிட்டாய் ஆடு மயிலே பண்ணமைக்கும் பாவலர்கள் பாடும் பொருளாய்ப் பயில்வல்ல ஓவியர்கள் தேடும் பொருளாய் வண்ண வகைக் கண்படைத்த தோகைமயிலே வட்டமிட்டு வட்டமிட்டே ஆடு மயிலே கெண்டைவிழி மாதர்களுன் அண்டை வருவார் கெஞ்சியுன்றன் சாயல்பெறச் சண்டை இடுவார் கொண்டைமயில் வென்ருேமென்று கொண்டு திரிவார் கோதையர் செருக்கடக்கி ஆடு Tլի 110