பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவியப் பாவை

அமிழ்தம் கசக்குமோ ?

தமிழ் வாழ்க என்று சொன்னால்

குடிமூழ்கிப் போகுமோ ? இங்கு

-தமிழ்
அமிழ்தம் கசக்குமோ ? தென்றல் கொதிக்குமோ ?

அலறுகிறீர் ! கதறுகிறீர் ! உமக்கிது அடுக்குமோ ?
-தமிழ்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் உண்டீர் !

ஆயினும் அந்தோ நன்றியைக் கொன்றீர் !

தாயினும் மேலாம் தமிழ்மொழி வாழ்ந்தால்

தாக்குமோ ? உம்மைச் சாய்க்குமோ ? எங்கள்

-தமிழ்

துறைதொறும் துறைதொறும் வளர்வழி சொன்னால்

துடிக்கிறீர்! கண்ணீர் வடிக்கிறீர் ! மேலும்

மறைவாகச் சூழ்ச்சிகள் செய்கிறீர் இந்நாள்

மாத்தமிழுக் காக்கங்கள் தேடுவதும் எந்நாள் ?

-தமிழ்

10