பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவியப் பாவை



உயிர்த் தமிழே!

முன்னைப் பழம் பொருளே—வேந்தர்
மூவர் உயிர்த் தமிழே!
கன்னற் சுவை யமுதே—என்றன்
கண்ணின் மணி விளக்கே!
என்னைப் பழிப்பவனை—நான்
ஏதும் நினைப்பதில்லை
உன்னைப் பழிப்பவனைப்—பகையாய்
உள்ளம் நினைக்கு தம்மா!

தீங்குனைச் சாரு தென்றல்—என்றன்
சிந்தை கொதிக்கு தம்மா!
பாங்குனை மேவு தென்றல்—நெஞ்சம்
பாய்ந்து மகிழு தம்மா!
ஆங்கிலம் கற்றவரும்—வேறு
அயல்மொழி கற்றவரும்
ஈங்கு புறக்கணித்தார்—அறிவை
என்று பெறுவாரோ?

19