பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவியப் பாவை




தாயைப் பழித்துரைத்தால்—நெஞ்சம்
தாங்கிட ஒப்பவில்லை
நாயவன் என்றுமிழ—உணர்வு
நாடிப் பெருகுதம்மா !
காயைக் கவர்ந்திடுவார்—நல்ல
கனிச்சுவை தானுணரார்
மாயச் சுமையுடலே—ஓம்பிட
மானம் விலை பகர்வார்

தோள்வலி மிக்கமையால்—எம்மைத்
தூற்றினர் வட வேந்தர்
வாள்வலி யாலவரை—வீழ்த்தி
வாழ்ந்ததும் இந்த இனம்
மாள்வது கண்டபினும்—பேதை
மாந்தரும் துஞ்சுகின்றார்!
ஆள்வதும் எம்மொழியோ?—இங்கே
ஆண்மையும் செத்ததுவோ?

20