பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை கன்னங் கருநிறந்தான் - எனினும் காதலிற் சிக்கிவிட்டேன் இன்னும்நீ பாடிடுவாய் - என்னை இன்பத்தில் ஆழ்த்திடுவாய் என்னலும் அவ்விசைதான் - மீண்டும் எங்கும் நிறைந்ததுவே கன்னலின் சாற்றினிமை - உவமை காட்டுந் தரமிலதே யாழில் எழுமிசைவோ - குழலோ யாதெனக் கூறிடுவேன்? பாழுல கைமறந்தேன் - அந்தப் பைம்பொழில் இன்னிசையால் அவ்விசை கேட்டொருவன் - அடடா! அக்குயில் வாழ்க’வென்ருன் செவ்விய ஓர் கவண்கல் - மோதிடச் சென்று பறந்ததுவே 'சென்று பறந்ததடன் - அடவோ! செத்து மடிந்திருந்தால் மென்று புசிப்பதற்கே - அக்குயில் மெத்தச் சுவைக்குமடா!' என்னச் சலித்துரைத்தான் - கவண்கல் எய்த சிறுகயவன் என்ன உலகமடா! - நன்மை எப்படி வாழுமடா!

- -- o 98