பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை விந்தையடா விந்தை மாநிலந் தன்னில் நடத்தி வரும் - விந்தை மானிடர் செய்கையைச் சாற்றுகின்றேன் ஏனிவர் இவ்வணம் ஆற்றுகின்ருர் - என எண்ணித் துணிந்துசொல் ஓர் முடிவு செத்த பிணத்தைப் புதைத்து வைத்த - குழி சென்றங்கு மீண்டுங் கிளறுகின்ருர் பித்தரைப் போலப் பிதற்றுகின்ளுர் - இனிப் பேசாப் பிணத்தின் முன் பேசுகின்ருர் தோண்டி எடுத்திடும் மேனிதனில் - படி துளசி துடைத்துடன் பூமுடித்து வேண்டிய பூசை செலுத்துகின்ருர் - இந்த விந்தையை யாதென் றுரைத்திடுவேன் சூட்டு புகழுரை எத்தனை தான் - அட! சொல்லுக் கடங்காமல் மிக்கதடா! ஏட்டில் எழுதிய போற்றிகளும் - ஒரு எண்ணிக்கை காட்டத் தொலையுமதோ? 21