பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெறி வேண்டும் == காதல் வெறி வேண்டும் - தமிழ்ச்செல்வி காதல் வெறி வேண்டும் - என்றன் பேதை மனத் திடையே - உன்றன் எழில் பேரொளி வீசிடவே - அந்தக் காதல் ஒளிப் பிழம்பால் - இன்பநிலை கண்டு களித்திடுவேன் - இன்பப் போதை வெறி யினிலே - வான் வெளி புக்குப் பறந் திடுவேன் செல்வத் திரு மகளே! - உன்னை நான் சேர நினைக் கையிலே - வஞ்சம் புல்லும் மனத் தவர்தாம் - கூடியொரு புன்மை தரு வாரேல் - என்றன் மல்லல் திரு நெடுந்தோள் - பகையை மாற்றிப் புறங்காண - உன்றன் முல்லை நகை காட்டிப் - போர்வெறி மூட்டித் தர வேண்டும் 2 d காவியப் பாவை -