பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை தமிழ் - என் காதலி _ பாரி மலை யருகில் - நல்ல பண்பினர் வா ழிடமாம் ஊரில் ஒரு பொழிலில் - உனை நான் உற்றறி நாள் முதலே மீறிய கா தலிளுல் - தமிழே மெய்ம்மறந் தே உழல்வேன் கூரிய நின் விழிபால் - எனைநீ கொல்வது தான் சரியோ ஆசை மனத் திரையில் - எண்ணம் அத்தனை யுங் கலந்து பாச முடன் எழுதி - உருவைப் பார்த்து மகிழ்ந் திருப்பேன் பேச மன மிலையேல் - உயிரைப் பிய்த்தெனைக் கொன் றுவிடு மோசம் புரி வதென்ருல் - என்றன் மூச்சை நிறுத் திவிடு 34