பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை என்றுமுள தென்தமிழில், இயம்பும் இசை நூலாகச் சீரிய கூரிய தீஞ்சொல் சி ற ந் து தீவிய மிழற்றும் காவியப் பாவையை நான்காம் பதிப்பாக உலாவரச் செய்கின்ருேம் இப்பாவை அழகில் தேவமனேகரி: அறிவில் சரசுவதி. இவள் இசைத் திருவோலக்கத்தில் மோகனப் புன்னகையொடு அம்சத் தொனிக் குரலால் தர்பார் நடத்துவாள். இவள் குரலுக்கு யாழும் குழலும் முழவும் இ ைச யு ம், இந்த ஏமவதி என்றென்றும் க ல் ய | ணி. இவள் இசைக்கு யாவரும் வசந்தான். இசையரசி யாகிய இப்பாவை வழங்கும் இசைத்தேனைப் பருக முன்வரும் உங்களுக்கும் இவ்வரசிக்கு உரியவரான கவியரசர்க்கும் நன்றி கூறி, உவகையோடு இப்பாவையை உலா வர விடுகின்ருேம். வணக்கம். புதுக்கோட்டை பு. அ. சுப்பிரமணியன் 21–4–30 பதிப்பக உரிமையாளர்.