பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. இளங்கோவடிகள் க. இலக்கியப் புரட்சி தமிழில் காவியம் தோன்றுதற்கு வித்திட்ட வித்தகர் இளங்கோவடிகளே என்று இயம்பலாம். தமிழ் இலக்கிய உலகிற்கே புதுநெறி யொன்றை வகுத் துப் புகுத்திய புலவர் அவராவர். கி. பி. இரண்டாம் நூற்ருண்டில் அவர் தமிழில் ஓர் இலக்கியப் புரட்சியை உண்டுபண்ணிவிட்டார். அவர் காட்டிய புதுவழியைப் பின்பற்றிப் புலவர் பலர் அரிய காவியங்களே ஆக்கினர். இளங்கோவடிகளின் இனிய நண்பராகவும், சேரனது பேரவைப் புலவராகவும் விளங்கிய சீத்தலேச் சாத்தனர், அடிகளாரைப் பின்பற்றிப் பெருங்காவியம் ஒன்றை அமைத்தார். அவர், இளங்கோ அருளிய சிலப்பதிகாரத்தோடு தொடர்புடைய மணிமேகலை வரலாற்றைக் காவியமாக வகுத்து உதவினர். ஆதலின், சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஒரே காலத்தில் தோன்றிய ஒன்ருேடொன்று பெரிதும் தொடர் புடைய பெருங் காவியங்களாகும். இங்ங்னம் தமிழில் முதற்காவியம் கண்ட இளங்கோவடிகள் காவிய உலகிலும் மற்ருெரு புரட்சியை உண்டு பண்ணினர். வடமொழியில் பழங் காவியம் என்று பாராட்டப்பெறுவது வான்மீகியின் இராமாயணம் ஆகும். கிரேக்க மொழியில் தோன்றிய பழங்காப்பியம் ஹோமர் பாடிய இலியட் என்னும் இலக்கியமாகும். இலியட் நாட்டு இளவரசன், மென லஸ் என்ற மன்னர்பெருமானின் அழகிய மனைவியாகிய ஹெலன் கோமகளைச் சிறை செய்ததால் நேர்ந்த