பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 இங்ங்னம் எல்லோருடைய உள்ளத்தையும் ஒருவழிப் படுத்திக் கொண்டு பெரும் புலவராகிய சாத்தனர் கண் ணகியைப் பற்றிய செய்தியைச் சொல்லத் தொடங் கினர். இவ்விடத்து இளங்கோவடிகள் தண்டமி ழாசான் சாத்தன் இஃது உரைக்கும்' என்று குறித்த திறம் பெருத்த இன்பத்தை விளைப்பதாகும். வேட்டுவர், தம் மலைநாட்டில் கண்ட மங்கையின் வரலாற்றைச் சொல்லத் தொடங்கிய நல்லிசைப் புலவ ராகிய சாத்தனர், வேந்தர் வேந்தே! அவ் வேட்டுவர், வேங்கை மர நீழலில் நிற்கக் கண்ட பொற்கொடியாள் சோழ நாட்டைச் சேர்ந்தவள். காவிரிப்பூம்பட்டினத் தில் தோன்றிய கற்புடையாள். அவள் பெயர் கண்ணகி. சிறந்த பத்தினித் தெய்வமாவாள். அவள் மதுரை மாநகரத்திலிருந்து இங்காடு நோக்கி வந்தாள்,' என்று கூறி, மேலும் விளக்கமாக அவள் வரலாற்றை விளம் பினர். க. கண்ணகி வரலாறு கண்ணகி கடிமணம் - கற்பரசியாகிய கண்ணகி, காவிரிப்பூம்பட்டினத் தில் வணிகர் மரபில் தோன்றியவள். பெருங்குடி மரபைச் சார்ந்த மாநாய்கன் என்பானுக்கு மகளாகப் பிறந்தவள். அவ்வூரிலேயே பெருங்குடி மரபைச் சேர்ந்த மாசாத்துவான் என்னும் பெருவணிகனும் இருந்தான். அவனுக்குக் குமரவேள் அனைய திருமகன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் கோவலன். அக் கோவலனுக்கும் கண்ணகிக்கும் மணஞ்செய்து மகிழ்க் தனர் பெற்ருேர். சில ஆண்டுகள் இவ் விருவரும் கருத் தொருமித்த காதலராய் மனையறத்தில் இனிது வாழ்ந் தனர். - -