பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 கூறும் தண்டமிழாசானகத் தலைசிறந்து விளங்கியவர் சாத்தனர் என்று துணியலாம். உ. திருக்குறட் பற்று தமிழ்ச்சங்கத்திற்கு வந்த நூல்களே எல்லாம் ஆராய்ந்து வெளியிடும் அரும்பணியை மேற்கொண் டிருந்த பெரும்புலவராகிய சாத்தனருக்குத் தீராத தலை வலி நோய் ஏற்பட்டது. அதனை அறிந்த மருத்துவன் தாமோதரர்ை என்னும் தமிழ்ப்புலவர், சாத்தனரின் நோயைப் போக்குதற்குத் தக்க மருந்தொன்றைத் தயாரித்தார். அதனைச் சாத்தனரிடம் கொடுத்து மோந்து பார்க்குமாறு வேண்டினர். தாமோதரனர் தந்த மருந்தால் சாத்தனரின் தலைவலிநோய் தணிய வில்லை. உலக முழுதும் கொண்டாடும் உயரிய நூலொன்று தமிழில் தோன்ற வில்லேயே என்ற வருத் தமே அவரது தலைவலிநோயை நாளுக்குநாள் பெருக்கி வந்தது. ஆதலின் தெய்வப்புலவர் ஆகிய திருவள்ளுவர் அருளிய திருக்குறள் நூலைக் கண்ட அன்றே சாத்த ரிைன் தலைவலி தணிந்து நீங்கலாயிற்று. இதனைக் கண்ணுற்ற மருத்துவன் தாமோதரனர், ந்ேதிநீர்க் கண்டம் தேறிசுக்குத் தேனளாய் மோந்தபின் யார்க்கும் தலைக்குத்தில்-காந்தி மலைக்குத்து மால்யான வள்ளுவtழப் பாலால் தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு.' என்று பாடினர். இப் பாட்டால் சாத்தனரைப் பற்றிய மற்ருெரு செய்தியும் புலனுவதாகும். உலகப் பொதுமறையாகிய திருக்குறளிடத்து மிகுந்த பற்றுக்கொண்டவர் சாத்த