பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 உலகவதவியை அடைதல் பின்னர் அக் காயசண்டிகை, மணிமேகலையை நோக்கி, இந் நகரில் முனிவர் பலர் உறையும் சக்கர வாளக் கோட்டத்தில் உலகவறவி என்னும் அம்பலம் ஒன்று உண்டு. அங்கே பசியால் வருந்தும் பலர் தங்கி இருப்பர். ஆதலின் நீ அவ்விடம் செல்வாயாக,' என்று வேண்டித் தன்னுாருக்குச் சென்ருள். மணிமேகலை அங்ங்னமே உலகவறவியை அடைந்து, அதனே மும் முறை வலம் வந்து பணிந்தாள். வெயிலால் வெதும்பிய கானகத்தில் பெருமழை தோன்றிற்ைபோல அமுத சுரபியுடன் அவ் அம்பலத்தில் ஏறி நின்ருள். இதோ! என் கையில் ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி இருக்கிறது. உணவருந்தும் விருப்புடையார் அனேவ ரும் வருக,” என்று கூறிள்ை. - மணிமேகலையின் கனிந்த மொழி கேட்ட பலரும் உலகவறவியைச் சூழ்ந்தனர். அவள் வாரி வழங்கிய உணவை உண்டு பசி தணிந்தனர். எக்த நேரத்திலும் மக்கள் உண்னும் ஒலியே அந்த அம்பலத்தில் எழுந்தது. உதயகுமரன் அம்பலம் உறுதல் மணிமேகலை பிக்குணிக்கோலம் தாங்கி உலகவறவி யில் புக்குத் தங்கிய செய்தியைச் சித்திராபதி கேள்வி யுற்ருள். 'கோவலன் இறந்தது கேட்டு மாதவியும் மணிமேகலையும் தவக்கோலம் தாங்கியது நமது குல ஒழுக்கத்திற்கு ஒவ்வாத செயலாகும் பாணன் இறந்த பொழுது அவனுடன் இறவாத யாழினப் போன்றவ ரன்ருே கணிகையர்! குறுந்தாது உண்டு வறும்பூத் துறக்கும் வண்டு போன்றவரன்ருே நம் குலப் பெண்டிர்! இம் மணிமேகலையின் தவக்கோலத்தை