பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

99

கன்கரன்ஸை, நம்முடைய இணக்கத்தைக் கேட்டிருக்கவேண்டும். தும்பைவிட்டு வாலைப் பிடிப்பதுபோல், அன்றைக்கே இணக்கம் கொடுக்காமல் இருந்திருந்தால் கபினி எழும்பியிருக்காது. ஹேரங்கி, ஹேமாவதி அணைகளை அவர்கள் கட்டியிருக்க முடியாது. மத்திய அரசாங்கம் அவர்கள் திட்டத்திற்கு மறைமுகமாக உதவி செய்கிறதோ என்று பேசவேண்டிய அவசியமும் இருக்காது. அன்றைக்குத் தமிழ்நாடு அரசாங்கம் அவற்றிக்கு ஒத்துக்கொண்டிருக்காவிட்டால், இன்றைக்குத் தீங்கு செய்யப்படுவதற்கு மத்திய அரசாங்கம் வசதி செய்த கொடுக்கிறதோ என்று பேச வேண்டிய அவசியமில்லையே! இப்பொழுது போராட வேண்டியதில்லையே!

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : தலைவரவர்களே, அம்மையார் அவர்கள் மறந்து போய் தன் கட்சியைக் குற்றம் சாட்டிக்கொண்டார்கள். இவைகளை 1957-லே ஆரம்பித்தார்கள், 1967-ல் அல்ல. நாம், 1967-ல் ஆட்சேபணை தெரிவித்திருக்கிறோம். 1967-லேயே எடுத்துச் சொல்லியிருக்கிறோம். போராட்டம் என்றால் அங்கே போய் குண்டு போட்டுவிடுவதா? அப்படி கிடையாது. பட்டுக்கோட்டை சீனிவாச ஐயர் அவர்கள் இந்த அவையிலேயிருந்தபொழுது (குறுக்கீடு வெளியிலே பேசினார்கள் படை எடுக்கலாம் என்றுகூடப் பேசினார்கள். ஆனால் நடக்கவில்லை. 1957-லே ஆரம்பிக்கப்பட்ட ஒன்று இது. நான் அதைக் குற்றமாகச் சொல்லவில்லை. நாம் எந்தக் கட்டத்திலும், எந்த இடத்திலும் தெரிவிக்க வேண்டிய ஆட்சேபணையை தெரிவிக்காமலில்லை.

-

திரு. ஆலடி அருணா : தலைவரவர்களே, அம்மையார் அவர்கள் நாம் அங்கீகாரம் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். அப்படி ஏதாவது கன்சென்ட கொடுத்திருக்கிறோமா?

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : பலமுறையும் இந்த அவையிலே சொல்லியிருக்கிறோம். நம்முடைய கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தினர் அவர்கள் குறிப்பிட்டதைப் போல் கர்நாடக மக்களுடைய நலனும் பாதிக்கக்கூடாது என்று இந்த அரசின் சார்பிலே எடுத்துச் சொல்லியிருக்கிறோம். அணைகள் கட்டுவதைப் பற்றி நமக்கு ஆட்சேபணையில்லை. ஆனால், ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் போடும்போது, பழைய ஆயக்கட்டுக்களுக்கு எந்தவிதமான குந்தகமும் ஏற்படக்கூடாது;