பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

காவிரிப் பிரச்சினை மீது

அதற்குப் போதுமான தண்ணீர் வேண்டும். அது போதுமான அளவு இருக்கின்ற வகையில் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் போடவேண்டுமென்று சொன்னோம். ஹேமாவதி அணையைக் கட்ட அங்கீகாரம் கொடுக்கவில்லை. ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் போட்ட பிறகு, அதனைப் பார்த்தபிறகுதான் அங்கீகாரம் என்று நிபந்தனையின் அடிப்படையிலேதான் கொடுத்திருக்கிறோம்.

டாக்டர் எச். வி. ஹாண்டே : நம்முடைய முதலமைச்ச ரவர்கள் தன்னுடைய உரையில் நம்மை வாடவைத்து, கர்நாடகாவை வாழ வைக்க மத்திய அரசு மறைமுகமாக உதவி செய்கிறதோ என்று சொன்னார்கள். என்னுடைய கருத்தெல்லாம் நம்மை வாடவைத்து அவர்கள் வாழ முடியாது. அதுபற்றி முதலமைச்சரவர்களிடம் கடிதம்கூடக் கொடுத்திருக்கிறேன். இப்பொழுது இந்த அணைக்கட்டுகள் மூலமாகப் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் அங்கே முழுகிவிடக்கூடிய நிலைமையிருக்கின்றன. அதை எழுதி முதலமைச்சரிடத்திலே கொடுத்திருக்கிறோம். அங்கேயே அணைக்கட்டுகளுக்கு எதிர்ப்பு இருக்கிறது. ஆகவே, நம்மை வாடவைத்து அவர்கள் வாழ முடியாது. அதில் ரொம்பக் கஷ்டம் இருக்கிறது. இந்தக் கருத்துக்களை மத்திய அரசுக்குச் சொல்வதன்மூலமாக நம்முடைய கருத்து வலிவடையும். அதனை மத்திய அரசுக்குச் சொல்லியிருக் கிறார்களா என அறிய விரும்புகிறேன்.

-

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : இந்த கருத்தும் சொல்லப்பட்டிருக்கிறது. அதுமாத்திரமல்லாமல், விஸ்வேஸ் வரய்யா - கெனால் வாய்க்கால் இருக்கிறது. அந்தக் கால்வாய் மூலமாகப் பயன்படுகிற ஆயக்கட்டுக்காரர்கள் ஹேமாவதி அணையை எதிர்க்கிறார்கள். அந்தக் கருத்தும் சொல்லப் பட்டிருக்கிறது. நான் முதலில் சொன்னதுபோல், கிருஷ்ணா நதி அவார்டிலே அவர்களுக்கு 500 டி.எம்.சி. கிடைக்கும்போது, அதை முதலிலே பயன்படுத்திக்கொள்ளட்டும், அதற்குப் பிறகு இதைப்பற்றி பேசலாம் என்று எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.