பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

103

அதற்கிடையிலே மத்திய அரசிடம் நாம் நீதியை எதிர்பார்க்கிறோம். நடுவர் தீர்ப்புக்கு விடவேண்டும் என்று கட்சி சார்பற்றமுறையில் தமிழக மக்கள் தங்களுடைய குரலை உயர்த்தியிருக்கின்றார்கள். அதற்கு மத்திய அரசு இணங்கி உடனடியாக நடுவர் தீர்ப்புக்கு விடும் என் று எதிர்பார்க்கிறோம் அதற்கிடையிலே பத்திரிகையிலே "பேச்சுவார்த்தைக்கு மீண்டும் இடம் இல்லையா? ஏன் அந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தக்கூடாது? இதிலேயும் பிடிவாதம் பிடிக்கவேண்டுமா?” என்ற வகையிலே எல்லாம் செய்திகள் வருகின்றன. நாம் பேச்சுவார்த்தையே கூடாது, இனிமேல் பேசவே தயாராக இல்லை என்று சொல்லாவிட்டாலும், பேச்சுவார்த்தைகள் இனிமேல் பயன் அளிக்குமா என்கிற சந்தேகம்தான் நமக்கு ஏற்பட்டிருக்கின்றது. ஏனென்றால் 1968-ஆம் ஆண்டு முதல் நாம் கடந்த ஆறு ஆண்டு காலமாகப் பேச்சுவார்த்தை நடத்தி அதிலே வெற்றிபெற முடியவில்லை. அது மாத்திரம் அல்ல. 1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்திற்கு மாறாக கபினித் தண்ணீர் குறைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்திலே பயிர்கள் காய்ந்து கொண்டிருக்கின்றன என்று எடுத்துச் சொல்லியும், மத்திய அரசு நம்முடைய தேவைகளை, குரலை அலட்சியப்படுத்துகின்ற அளவிலேதான் நடந்துகொண்டிருக் கின்றது. இன்றைக்கு விவசாயத்துறைக்குப் பொறுப்பேற்றிருக் கின்ற பெருமதிப்பிற்குரிய திரு. ஜகஜீவன்ராம் அவர்கள் தமிழ் நாட்டின்பால் அன்பில்லாதவர் என்று கூறிவிடமுடியாது. ஆனாலும் இன்றைக்கு அவரிடத்திலேதான் போய் நாம் அரிசி வேண்டுமென்று கேட்கிறோம். அதே நேரத்தில் இன்றைக்கு கபினித் தண்ணீர் தஞ்சை மாவட்டத்திற்கு விடப்பட்டு காய்ந்து கொண்டிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான ஏக்கரா நிலங்கள் பயன்பெறுமேயானால், அவரிடத்திலே நாம் கேட்கின்ற அரிசியிலே நாம் ஓரளவு குறைத்துக் கொள்ளவும் முடியும். இவைகளையெல்லாம் அவர்கள் எண்ணிப்பார்க்காமல் இல்லை. இவைகளையெல்லாம் நாம் சிந்திக்கும் பொழுதுதான், நண்பர் திரு. சுவாமிநாதன் அவர்கள் குறிப்பிட்டதுபோல், தவிர்க்க முடியாத அரசியல் சூழ்நிலைகள் தலைகாட்டி விடுகின்றனவோ, அதற்கான தண்டனையை தமிழ்நாட்டு மக்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிறதோ என்று நாம் வேதனைப்பட வேண்டி யிருக்கிறது. கபினித் தண்ணீரைத்திறந்து விடுங்கள் என்று ஓர்