பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

காவிரிப் பிரச்சினை மீது

எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். நல்ல முடிவுகளை அறிவிப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்புத் தர என்றைக்கும் தயாராக இருக்கின்றன: நாங்கள் தயாராக இருக்கிறோம். இருந்தாலும் கூட இன்றைக்கு ஆளுநர் உரையிலே பல்வேறு பிரச்சனைகளை நாம் பேசிக்கொண்டிருக் கிறோம். அதே நேரத்தில் விவசாயிகளுக்கு ஏதாவது ஒரு திட்டத்தை ஆளுநர் உரையிலே அறிவித்திருக்கிறார்களா என்றால் இல்லை. அதுபற்றி ஒன்றும் குறிப்பிடப்படவில்லை.

காவிரி நீர்ப் பிரச்சினை பற்றி வெளியே தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் குறித்து:

திரு. உ. ரா. வரதராசன் ரா. வரதராசன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழக மக்களுக்கு மிகவும் அக்கறையுள்ள, ஆனால் சிக்கலான காவிரி நீர்ப்பிரச்சினை சம்பந்தமாக அண்மையில் வெளியாகி இருக்கக்கூடிய இரு தகவல்கள் குறித்து மாண்புமிகு முதல்வர் அவர்களிடத்திலே விளக்கம் பெறுவதற்காக உங்கள் இசைவு பெற்று நான் எழுப்புகிறேன். 1924ஆம் ஆண்டில் ஏற்பட்ட காவிரி நீர் சம்பந்தமான ஒப்பந்தம் அன்றைய சென்னை-மைசூர் மாகாணங்களுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தம். அது 1956 ஆம் ஆண்டில் உருவாகிய கர்நாடக அரசைக் கட்டுப்படுத்தாது, எவ்வாறு கட்டுப்படுத்தும் என்கிற பொருள்பட கர்நாடக மாநில முதலமைச்சர் திரு.வீரேந்திரபட்டீல் பெங்களூரில் சனிக்கிழமையன்று ஒரு கருத்தைத் தெரிவித்தார்கள். எந்த ஒரு ஒப்பந்தமும் அடுத்து ஒரு ஒப்பந்தமோ அல்லது தீர்ப்போ வராத வரையில் அதனுடைய காலக்கெடு முடிந்தாலும் அமலில் இருப்பதாகத்தான் கருதப்படும் என்ற பொருளில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதே அவையில் முன்பு ஒரு கருத்தைச் சொன்னார்கள். அதற்கு மறுப்புத் தெரிவிப்பது என்பதுமிக ஆபத்தான, இப்போது நடைமுறையில் காவிரி நீர் கிடைக்கக்கூடியதைக் கூட கிடைக்காமல் செய்யக்கூடிய ஒன்று. அது பற்றிய கருத்தை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: சுருக்கமாகக்

கேளுங்கள். உரையாற்ற ஆரம்பிக்காதீர்கள்.