பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

113

அவைகள் எல்லாம் வேறு மாநிலத்திலே சேர்ந்துவிட்டன. ஆகவே, ஒப்பந்தம் செல்லாது என்று குறிப்பிட இயலாது. நிலப்பரப்பு என்று வாதத்திற்காக எடுத்துக்கொண்டாலும் கூட, ஒப்பந்தம் ஆகும்போது இருந்த நிலம் தஞ்சை, திருச்சி, தென்னாற்காடு மாவட்டத்தில் சில பகுதிகள் என்கிற காவேரி டெல்ட்டாதான். காவிரி நதி தீரம், காவிரி டெல்ட்டா அப்படியே இருக்கிறது. அது எங்கும் போய்விடவில்லை. நாம் இப்போது அதற்குரிய தண்ணீருக்காகத்தான் 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு அதைத்தான் இப்போது வலியுறுத்திக் கொண்டு இருக்கிறோம். அது நீடிப்பதாக நாம் வாதித்துக் கொண்டிருக்கிறோம். அந்த வாதம் தவறான வாதம் அல்ல. ஏனென்றால் ஒப்பந்தத்திலே உபரித் தண்ணீரை பற்றித்தான் பிரச்சினை என்பதால் வாதாடிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் இப்போதும் பேசித்

தீர்த்துக்கொள்ளலாம் என்று சொல்கின்றார்கள்.

நடுவர் தீர்ப்புக்கு நாங்கள் விடுகின்ற காரணத்தினால் இடையிலே பேசவே கூடாது என்று பொருள் அல்ல. நடுவர் தீர்ப்புக்கான ஆணை பிறப்பிக்கப்பட்டபோதுகூட நாம் பேசித் தீர்த்துக் கொண்டு, ஒரு சுமூகமாகப் போய், நாமும் அவர்களும் சென்று நடுவர் தீர்ப்புக்கு முன்னால் நின்று நாங்கள் பேசித் தீர்த்துக் கொண்டு விட்டோம். எனவே, நடுவர் தீர்ப்புத் தேவையில்லை என்று சொன்னால், இல்லை, இல்லை, நீங்கள் பேசித் தீர்த்தாலும் முடியாது, நான் தீர்ப்பு அளித்துத்தான் தீருவேன் என்று எந்த நடுவரும் சொல்லமாட்டார். எத்தனையோ வழக்குகள் இப்போதுகூட கோர்ட்டுக்குப் போனபிறகு, வழக்கிலே சம்பந்தப் பட்டவர்கள் அவர்களுக்குள்ளே சமரசம் செய்துகொண்டு கோர்ட்டுக்குப் போய் நாங்கள் சமரசமாக ஆகிவிட்டோம் என்று சொல்லி வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்வதுண்டு. அதுபோல செய்துகொள்ள வழி இருக்கிறது.

அ. தி. மு. க. இணைப்பொதுச்செயலாளர் திரு. எஸ். டி. சோமசுந்தரம் அவர்கள் சொன்னதாக திரு.வரதராசன் அவர்கள் ஒன்றைக் குறிப்பிட்டார்கள். ஏற்கனவே ஹேமாவதி போன்ற சில இடங்களிலே அணை கட்டுகின்றபோது, தமிழக அரசு அதற்கு ஸ்டே கேட்டு வாங்கவில்லை என்று சொன்னார்கள் என்றார்கள். அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததால், இங்கே அரசின் சார்பிலே செய்யப்பட்டதை, திரு.எஸ்.டி.சோமசுந்தரம்

5 - க.ச.உ. (கா.பி.)