பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

117

முன்னேற்றக் கழக அரசு மீது வெறுப்பு ஏற்படுத்த பெருத்த முயற்சி செய்யப்படுகிறது. அதைத்தான் அவர்கள் இங்கே பேசும்போது குறிப்பிட்டார்கள். 20 சதவீத மக்களை, இன்னமும் இவற்றை எல்லாம் நம்பிக்கொண்டு இருக்கிற மக்களைத் திருத்தி அவர்களுடைய விழிகளைத் திறக்க நாம் என்ன செய்யப் போகிறோம் என்று கேட்டார்கள். இந்த அரசு மாத்திரமல்ல அரசுக்கு அரசை நடத்துகின்ற ஆளும் கட்சிக்குத் தோழமை கட்சிகளாக இருக்கிற நாங்களும் உங்களோடு ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம் என்று சொன்னார்கள். இது போன்ற புனைச் சுருட்டுகளால் உண்மைக்கு மாறான கருத்துக்களால், செய்திகளால் நாட்டு மக்களுடைய எண்ணத்தைத் திசை திருப்புகின்றவர்களை அடையாளம் காட்டுகின்ற முயற்சியிலே நாம் அனைவரும் தொடர்ந்து ஈடுபட்டு ஆகவேண்டும். இல்லாவிட்டால் எவ்வளவு பெரிய உண்மைக்குச் சற்றும் பொருந்தாத ஒரு செய்தி சொல்லப்பட்டு இருக்கிறது என்பதை எடுத்துவைக்கின்ற தெரிந்துகொள்ளலாம்.

நான் இங்கே ஆதாரங்கள் மூலமாக நீங்கள்

21-5-1972 அன்றைய தினம் இந்திராகாந்தி அம்மையார் சென்னை வந்தார்கள். அவர்களிடத்தில் நான் காவிரிப் பிரச்சினை குறித்து விரிவாகப் பேசினேன். அதைப் பற்றி பெங்களூரிலிருந்து வெளியாகின்ற டெக்கான் ஹெரால்டு என்ற பத்திரிகையிலே பின்வருமாறு செய்தி வந்தது. "Prime Minister Indra Gandhi said today that inter-State disputes at river waters should be thrashed out by the Chief Ministers concerned. It is much easier that way. If there is anything I can do, I will certainly help, she told the pressman after Tamil Nadu Chief Minister Karunanidhi had met her. இந்த செய்தி டெக்கான் ஹெரால்டு பத்திரிகையிலே அப்போது வந்து இருக்கிறது.

அப்படிச் சந்தித்துப் பேசியபொழுதுதான் அவர்கள் என்னிடத்திலே சொன்னார்கள். வழக்கு இருக்கும்போது பேசுவது என்பது சற்றுச் சிரமமான காரியம். இருதரப்பிலும் எரிச்சல் ஊட்டக்கூடிய நிலைமையிலே பேச்சுவார்த்தை அமைய வேண்டாம். எனவே அந்த வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்கின்ற முயற்சியிலே ஈடுபடுவது நல்லது என்று