பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

127

உரை : 14

நாள் : 20.04.1990

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நேற்றையதினம் காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைய வேண்டுமென்று இந்த மாமன்றத்திலே உள்ள உறுப்பினர்கள் தங்களுடைய இதயம் திறந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து, மிக ஆவலோடு நேற்றையதினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையினுடைய முடிவுகளை எதிர்பார்த்திருக்கின்ற சூழ்நிலையில் இந்த அறிக்கையை முன் வைத்து, இந்த அவையினுடைய ஏகோபித்த ஆதரவைப் பெறுவதற்காக, நான் இந்த அவையின் முன்னால் நிற்கின்றேன்,

காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்த பிரச்சினைக்காக, 19-4-1990 அன்று காலை 9 மணி அளவிலே தமிழக முதலைமைச்சர் கூட்டிய தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. அதிலே எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:-

1, 1892, 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தங்களில் தமிழ்நாட்டுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது.

2. 1974-இல் மத்திய உணவு அமைச்சர். தமிழ்நாடு முதலமைச்சர், கர்நாடக முதலமைச்சர் ஆகியோரிடையே நடந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளில், தமிழ்நாட்டின் சார்பில் ஒப்புக் கொண்டவாறு மேட்டூர் அணைக்கு கர்நாடகத்திலிருந்து வரும் நீரில் சரசரியாக 100 ஒன்றுக்கு ஆண்டு டி.எம்.சி. சிக்கனப்படுத்துவதன் மூலம் குறைத்துக்கொள்ள ஒப்புக்

கொள்ளலாம்.

3. இந்த அடிப்படையில் பேச்சுவார்த்தையின் மூலமாக