இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
12
"கேட்டார்ப் பிணிக்கும் தகைய வாய்க் கேளாரும் வேட்பமொழியும்" சொல்லேருழவர் கலைஞர். திறனறிந்து சொல்லைச் சொல்லுவதும், பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை யறிந்து சொல்லுவதும் கலைஞர் அவர்களுக்கு இயல்பாக வரப்பெற்ற கலையாகும். செறிந்த சிந்தனை, தேர்ந்த சொற்கள் இவையிரண்டும் கலைஞரது சொற்பொழிவுகளின் அடிநாதங்களாகும்.
சட்டப்பேரவையில் கலைஞர் ஆற்றிய
உரைகளைப் படிக்கும்போது இந்த
உண்மைகளை யாரும் எளிதில் உணர
முடியும். பரபரப்பும் விறுவிறுப்பும்,
ஆழமும் அழகும் மிகுந்திருக்கும் அவரது
உரைகள் காலத்தின் கண்ணாடிகளாகும். அவரது உரைகளில் காணப்படும் நுட்பமான புள்ளிவிவரங்களும், வாதத்திறமையும், நகைச்சுவையும் படிப்பவர்களின் கருத்தை நிச்சயம் கவர்ந்திழுக்கக்கூடியவை.