பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

131

உரை : 15

நாள் : 24.04.1990

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கர்நாடக முதலமைச்சர் அவர்கள் முன்கூட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டார் என்றும், அதனால் முடிவு எடுத்துவிட்டோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொன்னார்கள். கர்நாடகத்தில் இப்போது சட்டசபைக் கூட்டம் நடக்கவில்லை. எனவே அவர்களால் முன்கூட்டி அறிக்கையை விட முடியும். ஆனால் நான் சட்டசபைக்குக் கட்டுப்பட்டவன். சட்டசபை நடைபெற்றுக்கொண்டிருக்கிற நேரத்தில் 19ந் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் விபரங்களைப் பத்திரிகைகளில் வெளியிட்டால் மறுநாள் அவையில் உரிமைப் பிரச்சினை வரும். உரிமைப் பிரச்சினை வரும் என்பதற்காக மட்டுமல்ல, இந்த சட்டமன்றத்தை மதிப்பவன் என்ற முறையிலும் இந்த அவைக்கு மரியாதை தரவேண்டுமென்ற முறையிலும் நான் அதை அங்கே வெளியிடவில்லை. நிருபர்கள் என்னை எவ்வளவோ துருவித் துருவிக் கேட்டபோதும் கூட, சட்டமன்றத்தில்தான் அதை அறிவிப்பேன். சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, உங்களிடத்தில் அதை அறிவிக்க இயலாது என்று நான் கூறிவிட்டேன். அதனால் அறிவிக்கவில்லை. அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைக்கவில்லை, சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் மாத்திரம் போதாது என்பதற்காக நான் பதில் அளிக்கவில்லை என்று எதிர்க் கட்சித் தலைவர் அவர்கள் சொன்னார்கள்.

இந்த காவிரிப் பிரச்சினையைப் பொறுத்தவரையில், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி-கடந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி-சட்டமன்றத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கலந்துபேசி, முடிவுகளை எடுப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால்