பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

காவிரிப் பிரச்சினை மீது

என்ற காரணத்தினால், இனி பேச்சுவார்த்தைக்கே இடமில்லை பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என்ற செய்தியை நாம் உச்ச நீதிமன்றத்திற்குச் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். அதைத்தான், நான் இங்கே ஒரு தீர்மானமாக முன் மொழிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் பின்வரும் தனித் தீர்மானத்தை மொழிகிறேன்:

'காவிரிப் பிரச்சினையை நடுவர் தீர்ப்புக்கு விட வேண்டுமென்று, உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று, தஞ்சை விவசாயிகள் சார்பில் தொடர்ந்துள்ள வழக்கில், தமிழக அரசு தன்னையும் இணைத்துக் கொண்டிருப்பது (Implead) தெரிந்ததே இன்று, உச்ச நீதிமன்றத்தில் அந்த வழக்கின் மீது, விசாரனை தொடர்ந்து நடக்கிறது. கடந்த 19ஆம் தேதி, தமிழக முதலமைச்சருக்கும், கர்நாடக முதலமைச்சருக்கும் இடையே நடந்த இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என்றும், இனி பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்றும், எனவே, உச்ச நீதிமன்றம், காவிரிப் பிரச்சினையை, உடனடியாக நடுவர் தீர்ப்புக்கு விடுவதற்கு, மத்திய அரசு உத்தரவிட வேண்டு மென்றும், நமது தமிழக அரசின் சார்பில், உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உண்மை நிலையை, மத்திய அரசின் சார்பிலே மறைக்காமல் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்து உரைக்கவேண்டுமென்றும் பேரவையின் சார்பில், தமிழக அரசு, மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது".

இந்தத் தனித் தீர்மானத்தை அனைவரும் ஆதரித்து நிறைவேற்றித் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். தலைவர் அவர்களே, உங்கள் மூலமாக.

தனித் தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப் பெற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, காவிரி நதி நீர்ப் பங்கீடு பிரச்சினையில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திற்கு, இந்தப் பிரச்சினையிலே பேச்சுவார்த்தை முடிந்து தோல்வி அடைந்து விட்டது என்ற தகவலை மறைக்காமல் தர வேண்டுமென்ற