பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

151

கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன். இதிலே மத்திய அரசு தலையிடுவது தவறல்ல: தலையிட வேண்டும். பேச்சுவார்த்தை என அதிலே ஈடுபடுவது என்று வருகிறபோது, ஏதோ நாம் எல்லா உரிமைகளையும் விட்டுவிட்டு, அவர்களோடு பேசப் போவதைப் போல சிலபேர் கற்பனை செய்துகொண்டு, இதை ஒரு அரசியலாக்க எண்ணுகின்றனர். அப்படியல்ல. நடுவர் மன்றத்தி னுடைய அந்த வரையறைக்குட்பட்டுத்தான் பேச்சுவார்த்தை என்று திருப்பித் திருப்பிச் சொன்னாலும் கூட, அந்த வாக்கியத்திலே உள்ள 'அந்த நடுவர் மன்றத்தினுடைய வரையறைக்குட்பட்டு' என்ற பகுதியை நீக்கிவிட்டு, 'ஆஹா, பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை' என்று சிலபேர் இன்றைக்கு அரசியலிலே லாபம் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பிரச்சினையிலே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவனாக இருக்கின்ற எனக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுடைய தலைவராக இருக்கின்ற அன்பிற்குரிய மூப்பனார் அவர்களுக்கும், - ‘எல்லோரையும்விட' என்று சொன்னால், சில பேருக்கு கோபம் வரலாம்; இரண்டு பேருமே தஞ்சாவூர்க்காரர்கள் என்ற முறையில் அதிக அக்கறையுண்டு என்பதை அவையிலே உள்ள உறுப்பினர்களும், நாட்டு மக்களும், தஞ்சைத் தரணியிலும், திருச்சித் தரணியிலும் வாழ்கின்ற காவிரி டெல்டாவினுடைய விவசாயிகளும் மிக நன்றாக அறிவார்கள். இதுபற்றி நாங்கள் இருவரும் பேசியிருக்கிறோம். இருவரும் பேசவேண்டிய இடத்திலே பேசியிருக்கிறோம். பேச வேண்டிய முறைப்படி பேசியிருக்கிறோம். உரிமைகளை விட்டுக்கொடுத்து விட்டு, விவசாயிகளுடைய வாழ்விலே ஒரு பெரிய துயரத்தை உருவாக்கிவிட்டு அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க, இந்த அரசு ஒருக்காலும் சம்மதிக்காது என்ற உறுதியை நான் இந்த அவைக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி).

நடுவர் மன்றத்தை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்ததே திராவிட முன்னேற்றக் கழக அரசுதான். தேசீய முன்னணி ஆட்சி பிரதமர் திரு. வி. பி. சிங் அவர்களுடைய தலைமையிலே நடைபெற்ற போதுதான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்று