பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

காவிரிப் பிரச்சினை மீது

உரை : 18

நாள் : 31.07.1996

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே. உச்ச நீதிமன்றத்தில் நம்முடைய அரசின் சார்பாக ஒரு முறையீட்டு வழக்கு தொடரப்பட்டு, காவிரியில் நடுவர் மன்றத்தினுடைய இடைக்காலத் தீர்ப்புக் கேற்ப உரிய தண்ணீரை, தண்ணீரை, இந்தத் திங்களுக்கு எவ்வளவு வழங்க வேண்டுமோ அதனை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற வகையிலும், பொதுவாக நடுவர் மன்றத்தி னுடைய தீர்ப்பை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற வகையிலும் அந்த முறையீட்டிலே குறிக்கப் பெற்று, அதனை விசாரித்த உச்ச நீதிமன்றத்தினுடைய மாண்புமிகு நீதிபதிகள் நேற்றையதினம் தீர்ப்பு என்று வழங்குவதற்குப் பதிலாக ஒரு அறிவுரையை வழங்கிய செய்தி இரவு 8 மணிக்கு எனக்குக் கிடைத்தது. அந்தச் செய்தி கிடைத்தவுடன் டெல்லியிலே தங்கி வழக்கை நடத்திக்கொண்டிருக்கின்ற வழக்கறிஞர்களோடும். நம்முடைய அரசின் வழக்கறிஞர்களோடும், அரசு பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளோடும் கலந்து பேசினேன். இரவு ஒரு மணி வரையில் இத்தகைய பேச்சுவார்த்தைகள் மூலம் நாம் என்ன நிலை எடுக்கலாம் என்பதைப் பற்றிச் சிந்தித்து நாம் எத்தகைய நிலை எடுத்துள்ளோம் என்பதை இந்த அவைக்கு விளக்குகின்ற வகையில் சில கருத்துக்களை இங்கே கூற நான் கடமைப்பட் டிருக்கிறேன். உச்ச நீதிமன்றத்திலே சொல்லப்பட்டிருப்பது, இரண்டு மாநில முதலமைச்சர்களும் கலந்து பேசிப் பேசுவது என்றால் நடுவர் மன்றத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் அல்ல. நடுவர் மன்றத்தினுடைய தீர்ப்பின்படி, இடைக்காலத் தீர்ப்பின்படி இப்பொழுது பெறவேண்டிய தண்ணீர் குறித்து அந்தப் பேச்சு வார்த்தையை நடத்தலாம். அதற்கு இரண்டு முதலமைச்சர்களும் தயாரா என்பதை இன்று பிற்பகல் ஒரு மணிக்குள்ளாக உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்று ஒரு அவசரமான