பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

157

என்று இப்படி நான் கடிதம் எழுதியிருக்கிறேன், அவர் 15ஆம் தேதிக்குப் பிறகுதான் சந்திக்க இயலும் என்று சொல்லியிருப்பது மிக மிகக் காலதாமதமான ஒரு செய்தி ஆகும். அதற்குள்ளாக நம்முடைய தேவையை நிறைவு செய்ய வேண்டும் என்பதும் ஏறத்தாழ 42 டி.எம்.சி.-யில் இதுவரையிலே அவர்களாகக் கொடுத்தது 5 டி.எம்.சி., இயற்கையாகத் தந்தது ஒரு 5 டி.எம்.சி., என்ற அளவிலேதான் கிடைத்திருக்கிறது. ஏறத்தாழ 30 அல்லது 31 டி.எம்.சி., தண்ணீர் இந்தத் திங்களில் நமக்குத் தரவேண்டும். அதைப்பற்றித்தான் இப்போது பேச்சு வார்த்தையே தவிர மொத்த, நீண்டகால இந்தக் கோரிக்கையைப் பற்றிய பேச்சுவார்த்தை அல்ல. அப்படி ஒரு பேச்சுவார்த்தை வருமானால், அதை எல்லாக் கட்சித் தலைவர்களையும் அழைத்துப் பேசித்தான், அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டுத்தான் அந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவேன். இப்போது இந்த 30, 31 டி.எம்.சி. தண்ணீரைப் பெறுவதைப் பற்றிய பேச்சுவார்த்தை என்பதால்தான் அவர்கள் எழுதிய கடிதத்திற்கு விரைவிலேயே சந்திக்கவேண்டும் என்றும், சென்னையில் சந்திப்பதற்கு அவர்களை வரவேற்பதற்குத் தயாராக இருக்கிறேன் என்றும் ஆகஸ்டு முதல் வாரத்திலேயே சந்திப்பதற்கு ஒரு வசதியான தேதியை மாண்புமிகு திரு. பட்டேல் அவர்களே குறிப்பிடவேண்டும் என்று கேட்டும் எழுதியிருக்கிறேன். இதுதான் இப்போது அவைக்கு நான் தருகின்ற தகவல். இந்தச் செய்தியை சுப்ரீம் கோர்ட்டுக்கும் நாங்கள் சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம் என்ற செய்தியை மாண்புமிகு திரு. பட்டேல் அவர்கள் தெரிவித்து இருப்பதைப் போல நாமும் நம்முடைய அரசின் சார்பாக நம்முடைய வழக்கறிஞர்கள் மூலமாக தெரிவிக்க இருக்கிறோம் அறிவித்து இந்த அளவிலே அமைகிறேன்.

திரு. சி. ஞானசேகரன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஆணையிட்டு இன்று பிற்பகலுக்குள் தேதி அறிவிக்கப்படவேண்டும் என்ற சூழ்நிலையில் இப்போது கர்நாடகத்தினுடைய முதலமைச்சர் அவர்கள் பேக்ஸ் மெசேஜ் அனுப்பியிருக்கிறார்கள்,