பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

காவிரிப் பிரச்சினை மீது

அதே நேரத்திலே கர்நாடக மாநிலத்திலே இருக்கின்ற விவசாயப் பெருங்குடி மக்கள், தமிழ்நாட்டில் உள்ள விவசாயப் பெருங்குடி மக்கள் நலனுக்குப் பாதகம் ஏற்படாத வகையில் இரண்டு மாநில அரசுகளும் ஒரு நல்ல முடிவை ஏற்படுத்து வதற்குக் கடந்த 27 அல்லது 28 முறை நடந்த பேச்சுவாத்தையிலே இடமில்லாமல் போய்விட்ட காரணத்தாலும், முடிவு ஏற்படாமல் போய்விட்ட காரணத்தாலும்தான் நடுவர் மன்றத்தினுடைய உதவியை நாம் நாடினோம். நடுவர் மன்றமும் நமக்குக் கிடைத்தது. அதனுடைய தீர்ப்பும் கிடைத்தது; இடைக்கால நிவாரணம் தீர்ப்பும் கிடைத்தது; அதை நிறைவேற்றுவதிலே கர்நாடக மாநிலம் சில நேரங்களில் தடையாக இருந்தது. நிறை வேற்றவில்லை. எனவே, உச்ச நீதிமன்றத்திற்குச் செல்ல நேரிட்டது. இப்பொழுதும் செல்ல நேரிட்டிருக்கிறது. அதிலே உச்ச நீதிமன்றத்தினுடைய இந்த அறிவுரையை இன்றைக்கு ஏற்பதால் எந்தப் பாதகமும் ஏற்பட்டு விடாது. விரைவாக நமக்குக் கிடைக்க வேண்டிய, அவசரத்திற்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரைப் பெறுவதற்கும் ஒரு வழி ஏற்படும் என்ற நிலையிலேதான் அவர்களுக்கு நாம் பதில்

எழுதியிருக்கின்றோம்.

மத்திய அரசை அணுகக் கூடாதா என்று கேட்டிருக் கின்றார்கள். மத்திய அரசையும் நிச்சயமாக அணுகுவோம்; அணுகிக்கொண்டுதான் இருக்கின்றோம். இருந்தாலும்கூட, சட்ட ரீதியாக நாம் பெற்றுள்ள நடுவர் மன்றத்தினுடைய நிலையை இழந்துவிட்டு, வெறும் பேச்சுவார்த்தையின் மூலமாக மாத்திரம் இதற்கு ஒரு தீர்வு காண்பதாக நாம் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.