பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

161

உரை : 19

நாள் : 05.08.1996

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உச்ச நீதிமன்றத்தின் விருப்பத்திற்கேற்ப நானும், கர்நாடக முதலமைச்சர் அவர்களும் இன்று காலையில் தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினோம். இந்தப் பேச்சுவார்த்தை பரஸ்பரம் நட்புணர்வோடு நடைபெற்றது. இதன் விளைவாக உடனடி இடைக்கால நிவாரணமாக தமிழகம், கர்நாடகம் ஆகிய இரண்டு மாநில விவசாயிகளுக்கும் பாதகம் ஏற்படாத வகையில் காவிரித் தண்ணீரை இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கும் வண்ணம் பகிர்ந்து உபயோகித்துக் கொள்வது என்றும், இரு தரப்பினரின் தேவைகளையும் ஈடுசெய்யும் வகையை மனதில் கொள்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

ரு

கர்நாடக மாநிலத்திற்கு வந்து தொடர்ந்து இதுபற்றிப் பேச கர்நாடக முதலமைச்சர் அவர்கள் எனக்கு அழைப்பு விடுத்திருக் கிறார்கள். அந்தச் செய்தியையும் இந்த அவைக்கு மகிழ்ச்சியோடு தெரிவித்து, அந்தப் பயணம் ஆகஸ்டு 15-க்குப் பிறகு இருக்கக் கூடும் என்பதையும் அறிவிக்கின்றேன். வணக்கம். (மேசையைத் தட்டும் ஒலி).