பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

167

அதையே தீர்ப்பாக அளியுங்கள்' என்று சொல்ல அதிக நேரம் ஆகாது. எனவே, நடுவர் மன்றம் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதற்கிடையில் நடுவர் மன்றத்தினுடைய தலைவர் பதவி விலகிவிட்டார்.

அப்போதுகூட அந்தக் தலைவருக்கு, பதவி விலகிய தலைவருக்குப் பதிலாக இன்னொருவரை நியமிக்க வேண்டும், அல்லது, அவரையே நியமிக்க வேண்டும் என்றுதான் தமிழக அரசின் சார்பாக, பிரதமருக்குச் சொல்லப்பட்டது. பிரதமரும் ஒருமாத காலம், இரண்டுமாத காலம் தாமத்திற்குப் பிறகு, அவர் ச்சநீதிமன்றத்திற்கு எழுதியும்கூட, உச்சநீதிமன்றத்திலேயிருந்து, அவருக்கு, யாரை நியமித்து இருக்கிறோம் என்ற பதில் வர நேரமாயிற்று; நாள் ஆயிற்று. பிறகு உச்சநீதிமன்றம் ஒருவரை அறிவித்தது. அறிவித்த பிறகு, அரசு அதை ஏற்றுக்கொண்டது. மத்திய அரசு அதை ஏற்றுக் கொண்டு, பேச்சுவார்த்தை, நடுவர் மன்றத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 7-ஆம் தேதி நடுவர்மன்றம் கூடுகிறது என்று சொன்னால், கடைசி பேச்சு வார்த்தை, நமக்கும், கர்நாடகத்திற்கும் 5-ஆம் தேதி இங்கே நடைபெற்றிருக்கிறது. ஏன் 5-ஆம் தேதி நடைபெறுகிறது? பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியாவிட்டால், 7-ஆம் தேதி நடுவர்மன்றம் இருக்கவே இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் நடைபெற்றது. ஆகவே, நடுவர்மன்றத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு, பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. பேச்சு வார்த்தையில் பலவீனம் ஏற்பட்டால், அதை நடுவர் மன்றத்திற்குச் சொல்லலாம் என்ற அந்த கருத்தோடு அது நடைபெற்றது. அதிலே என்னென்ன பேசினீர்கள் பேசினீர்கள் என்பதைப் பலரும் கேட்டார்கள். பேச்சுவார்த்தையின்போது, பேசப்பட்ட விஷயங்களை வெளியிலே சொன்னால் அது இரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதல்ல அதைப்பற்றிய கருத்துக்கள் வெளியே வருமானால் ஏற்படக்கூடிய விளைவுகளை எண்ணிப் பார்க்கவேண்டும். ஏற்கெனவே ஒரு முறை, நடுவர்மன்றத்தினுடைய இடைக்கால ஆணையை நிறைவேற்ற கர்நாடக அரசு தவறியபோது, உணர்ச்சிமயமாக அந்தப் பிரச்சினையை அணுகிய காரணத்தினால், கர்நாடகத்திலே உள்ள தமிழர்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டார்கள்