பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

காவிரிப் பிரச்சினை மீது

என்பதை நாம் யாரும் மறந்துவிடக்கூடாது. நம்முடைய எண்ண மெல்லாம், காவிரிப் பிரச்சினையை வைத்து, கர்நாடகம், தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் இடையே ரகளை, அமளி, இரண்டு மாநில மக்களுக்கிடையே வேற்றுமை என்ற சூழ்நிலை உருவாகக்கூடாது என்பதுதான் நம்முடைய எண்ணம். எனவேதான், அகில இந்திய அளவிலே உள்ள, தமிழ்நாட்டிலே யுள்ள கட்சிகள் எல்லாம்கூட, அது இந்திய கம்யூனிஸ்ட் ஆனாலும், சி. பி. எம். ஆனாலும், வேறு பல கட்சிகள் ஆனாலும் கூட, தொடர்ந்து பேச்சுவார்த்தைதான் வேண்டும் என்பதை எடுத்துக்கூறி வந்திருக்கின்றன. இப்போதும் கூறுகிறார்கள் இருந்தாலும், பேச்சுவார்த்தைகளிலே வெற்றிபெற முடியவில்லை என்பதை நாம் மீண்டும் ஒருமுறை உணர்ந்திருக்கிறோம். அது ஒன்றும் தவறல்ல. 'பேச கூப்பிட்டார்கள், போகவில்லை' என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகாமல், பேச்சுவார்த்தையிலே கலந்து கொள்வதால் எந்தத் தவறும் இல்லை. இதிலே பிரதமர் தலையிட்டார் என்று நம்முடைய நண்பர் திரு. அழகிரி அவர்கள் கூறுவது, என்னால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. அவர் இன்னும் தலையிடவில்லை. தலையிட்டிருந்தால், இந்தப் பிரச்சினை அவரால் தீர்த்து வைக்கப்பட்டிருக்க முடியுமா என்பது வேறு விஷயம். அவரே தலையிட்டிருந்தால்கூட, கர்நாடக மாநில மக்கள், அதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. எனவே, அவருடைய கட்சிக் கூட்டத்திலே பேசவேண்டிய ஒரு விஷயத்தை, எங்களுடைய கட்சிக் கூட்டத்திலே பேசவேண்டிய ஒரு விஷயத்தை, பொதுவாக, அவர் இங்கே. கருணாநிதிக்கும், மூப்பனாருக்கும் சேர்த்துத்தான் பேசுகிறேன் என்று அவர் இங்கே பேசியிருப்பது, என்னைப் பொறுத்தவரையில், தனிப்பட்ட முறையிலே, அவ்வளவு விரும்பத்தக்கதல்ல. இருந்தாலும்கூட நான் அவருக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்; நாம் நீதியை நம்பியிரு கிறோம்; நடுவர்மன்றத்தை நம்பியிருக்கிறோம்; நாம் நீதியை நம்பியிருக்கிறோம்; இல்லை என்ற ஒரு நிலைமை ஏற்படுமே யானால், தமிழகத்தை நிச்சயமாக இந்த அரசு காட்டிக்கொடுக்காது என்பதை மாத்திரம் நான் உறுதிபட இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).