பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

காவிரிப் பிரச்சினை மீது

கையெழுத்து போடுகிறார்கள் Fair Copy-லே. 30-3-1993-லே கையெழுத்து போட்ட பிறகு, எப்போது கடிதத்தை (despatch) அனுப்புகிறார்கள் தெரியுமா? 14-4-1993-ல் கடிதத்தை அனுப்பியிருக்கிறார்கள். இப்படி காவிரிப் பிரச்சினையில் அக்கறை காட்டிய அம்மையார்தான் என்னைப் பார்த்து துரோகி, துரோகி என்கிறார். யார் யாரோ துரோகி என்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து இவரும் துரோகி என்கிறார் என்று நான் விட்டுவிட்டுப் போகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).