பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

185

இருந்த அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் எல்லாம்கூட பதில் சொல்ல முடியாமல், நாங்கள் சொன்ன விளக்கத்தை ஏற்றுக் கொள்ளக்கூடிய சூழ்நிலை இருந்தது என்பதையும் நாடு மிக நன்றாக அறியும்.

1974-ஆம் ஆண்டோடு ஒப்பந்தம் ஒன்றும் முடிந்து விடவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் காவிரிப் பிரச்சினையில் ரொம்ப அக்கறை உள்ளவர்கள், உண்ணாவிரதம் எல்லாம் இருந்தார்கள். அவர்கள் சொல்லியிருக் கிறார்க்ள், 80 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தேன், என்னைப் பார்த்தா துரோகி என்கிறாய் என்றெல்லாம் கேட்டார்கள். நாங்கள் கூட அப்படி உண்ணாவிரதம் இருக்கமுடியும் - திண்டு, திம்மாசு எல்லாம் போட்டுக்கொண்டு. காந்தியடிகளுடைய உண்ணா விரதத்தைப் பார்த்திருக்கின்றோம். ஒரு கயிற்றுக் கட்டிலில் அவர் படுத்திருப்பார். கடைசியாக எலுமிச்சைச் சாறுகூட தகரக் குவளையில் சாப்பிட்டு அப்படிப்பட்ட எளிமையான உண்ணா விரதம் இருந்ததைப் பார்த்திருக்கின்றோம். தமிழ்நாடு என்று பெயர் வைக்கவேண்டுமென்பதற்காக, 60 நாட்களுக்கு மேல் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்க நாடாருடைய உண்ணாவிரதத்தையும் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் இந்த உண்ணாவிரதம் எல்லோரும் வழிகாட்டக்கூடிய ஒரு உண்ணா விரதம். அகில உலகத்திலும் உள்ள மக்களுக்கெல்லாம், உண்ணா விரதிகளுக்கெல்லாம் வழிகாட்டக்கூடிய ஒப்பற்ற உண்ணாவிரதம் அந்த உண்ணாவிரதம்.

கட்டில், கட்டில் மீது மெத்தை, மெத்தைக்கு இருபுறமும் தலையணைகள், மேலே ஒரு தலையணை, கீழே ஒரு தலையணை, பாதுகாப்புக்கு ஐயாயிரம் போலீசார், பக்கத்திலே கடற்கரை ஓரத்திலே ஒரு வேன். சிறுநீர் கழிக்கச் செல்வதற்கோ அல்லது சிற்றுண்டி அருந்துவதற்கோ அந்த வேன் அடிக்கடி பயன்படுத்தப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு உண்ணாவிரதத்தை இருந்துவிட்டுத்தான் பெரிய தியாகம் செய்துவிட்டேன் என்றெல்லாம் அந்த அம்மையார் பேசுவது மாத்திரம் அல்ல, ஒரு பெரிய தவறான தகவலை என்மீது அல்லது அரசு மீது பழி சொல்வதற்காக வெளியிட்டிருக்கின்றார்கள். அதைப்