பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

187

அப்போது இருந்த காங்கிரஸ் அரசு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்கூட, அத்ந எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், ஆரம்பிக்கப்பட்டது 1965ஆம் ஆண்டு. முடிக்கப்பட்டது 1984-ஆம் ஆண்டு. கபினி அணை கட்டும் பணி 1975-ல் நிறைவேற்றப்பட்டது என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஆனால் அந்த அணை கட்ட ஆரம்பிக்கப்பட்டது 1959-ல், 1978-79-ல் அந்த அணை கட்டி முடிக்கப்பட்டது. ஹேமாவதி அணை 1976-ல் நிறைவேற்றப்பட்டது என்று ஜெயலலிதா கூறுகிறார். அது ஆரம்பிக்கப்பட்டது 1968-ஆம் ஆண்டு. கட்டி முடிக்கப்பட்டது 1979-80-ல். 1976-ல் முடிந்ததாக ஜெயலலிதா அறிக்கையில் சொல்லியிருக்கிறார். இல்லை. ஹாரங்கி அணை கட்ட ஆரம்பிக்கப்பட்டது 1964-ஆம் ஆண்டு முடித்தது 1979-80-ம் ஆண்டில்.

இப்படி கழக அரசு தமிழகத்திலே ஏற்படுவதற்கு முன்பே, காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேகூட இந்த அணைகள் எல்லாம் தொடங்கப்பட்டுவிட்டன. அப்போது எதிர்த்தும்கூட 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி அன்றைக்கிருந்த அரசு தங்களுடைய எதிர்ப்பை காட்டியும்கூட கர்நாடக அரசு அதை மீறி அந்தக் காலத்திலிருந்தே செயல்பட்டிருக்கின்றது. மத்திய திட்டக்குழு கர்நாடகத்தின் திட்டங்களுக்கெல்லாம் அனுமதி கொடுக்க வில்லை என்பது இங்கே முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. காநாடகத்தின் எந்தவொரு அணைக்கும் மத்திய திட்டக் குழு அனுமதி கொடுக்கவேயில்லை. மத்திய திட்டக் குழுவின் ஒப்புதல் பெறாமல் கர்நாடக அரசு இந்த அணைக்கட்டுத் திட்டங்களையெல்லாம் நிறைவேற்றியிருப்பது, ஐந்தாண்டுகள் இங்கே முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் போவது ஆச்சரியம்தான். தெரியாமல் போகவில்லை. தெரிந்த உண்மைகளுக்கு மாறான விஷயங்களைச் சொல்லலாம் என்று முடிவு எடுத்துக் கொண்டவர்களைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்? அதைத்தான் அவர்கள் இன்றைக்குச் சொல்லிக் காண்டிருக்கிறார்கள். மத்திய அரசு அணைக்கட்டுத் திட்டங்களை நிறைவேற்ற எந்த நிதியும் தரவில்லை. ஒரு பெரிய அணைக்கட்டு என்றால் மத்திய அரச நிதி தரும். அந்த நிதியும் கூட அவர்கள் தரவில்லை. ஏனென்றால், தமிழ்நாடு அரசு,