பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

191

அரசும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. Authority என்றால், அதற்குள்ள வலிமைக்கும் Committee என்றால் அதற்குள்ள வலிமைக்கும் உள்ள வேறுபாடு, முரண்பாடு தெரிந்த காரணத்தால்தான் Authority என்றுதான் இருக்கவேண்டும். என்று நாம் வலியுறுத்தினோம். இப்போதும் வலியுறுத்திக் கொண்டிருக் கிறோம். மத்திய அரசும். ஐக்கிய முன்னணி அரசும் நம்முடைய கருத்துக்குத்தான் செவி சாய்த்தது. அந்தக் கருத்துதான் இன்றைக்கு உச்சநீதிமன்றத்திலே இருக்கிறது. அந்த அடிப்படையிலேதான் இந்த வழக்கும் நடைபெற்றுக் கெண்டிருக்கிறது. எனவே இந்த அரசு என்ன செய்தது, தமிழக அரசு என்ன செய்தது, ஐக்கிய முன்னணி அரசு என்ன செய்தது என்று எழுப்பிய இந்த வினாவிற்கு இந்த விளக்கத்தை மாத்திரம் நான் தருகின்றேன்.

ஆக, ஒன்றை நம்முடைய பரிதி இளம்வழுதி அவர் களுடைய பேச்சின் மூலமாகத் தங்களுக்கு வேண்டுகோளாக விடுக்கின்றேன். என்று சொன்னாரே, அந்தச் சொற்றொடர் இடம் பெறாமல் இருப்பது நல்லது. ஏனென்றால், உள்ளபடியே யாராவது செய்தாலும்கூட என்று குறிப்பிடுவது நல்லதல்ல. ஆனால், அவர் குறிப்பிட்டதைப்போல இன்னும் அவர்கள் யாரும் முழுமையாகப் பொறுப்பு ஏற்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் நம்முடைய முன்னாள் முதலமைச்சர் காவிரிப் பிரச்சினையிலே ஒரு தீர்வு காணவேண்டும் என்று வைத்த நிபந்தனை வெளியிடப்பட்டுள்ள அந்தத் தேசிய திட்டத்திலே இடம் பெற்றிருக்கிறதா என்றால் இடம் பெறவில்லை. என்ன இடம் பெற்றிருக்கிறது? கர்நாடக முதலமைச்சர் படேல் எதை வலியுறுத்தியிருக்கிறாரோ அதுதான் இடம் பெற்றிருக்கிறது. படேல் எதை வலியுறுத்தி வருகிறார்? அவர் வலியுறுத்தி வருவது தேசிய நீர்க்கொள்கை வகுக்கப்பட்ட பிறகு இதைப்பற்றிப் பேசலாம் என்கிறார். இப்போது நம்மிடத்தில் கொடுக்கப்பட் டிருக்கின்ற அந்தத் தேசிய திட்டத்தில் என்ன இடம் பெற்றிருக்கிறது என்றால், தேசிய நீர்க்கொள்கை ஒன்று வகுக்கப்படும். அதற்குப் பிறகு அவை நடைமுறைப்படுத்தப் படும் என்று இருக்கிறது. நான் அதிகமாக இந்தப் பிரச்சினையிலே

மாண்புமிகு பேரவைத் தலைவரின் ஆணைக்கிணங்க அகற்றப்பெற்றது.