பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

8667

201

அடுத்து, கர்நாடக முதல்வர் தந்துள்ள அறிக்கையைப் பற்றி எல்லாம் இப்போது நான் விமர்சிக்க விரும்பவில்லை. ஏன் என்றால் அந்தக் கருத்தை நாம் ஏற்றுக்கொள்வதாக இல்லை. இனியும் பேச்சுவார்த்தை என்பதற்கு இடம் இல்லை. ஆனால், இன்றைய பிரதமர் அவர்கள், மீண்டும் பேச்சுவார்த்தை என்று வலியுறுத்துவார்களேயானால் அவரிடத்திலே, எத்தனை முறை பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது, எவ்வளவு தோல்விகள் அதிலே ஏற்பட்டிருக்கின்றன என்பதையும், உச்ச நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு சென்றபிறகு உச்சநீதிமன்றத்தினுடைய முடிவைத் தான், ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதைத்தான், தமிழக அரசின், சார்பாக, தமிழ் மக்களின் சார்பாக, எல்லாக் கட்சிகளின் சார்பாக நான் எடுத்துவைக்க இருக்கின்றேன் என்பதை எடுத்துக்கூறி, இதற்கு இடையிலே நாம் இதுபோன்ற விவாதங்களை அடிக்கடி இங்கே எடுத்துக் காட்டியிருப்பதைப்போல, சூடானதாக, உணர்ச்சிவயப்பட்டதாக ஆக்குவதன் மூலம், இரு மாநில மக்களிடையே வேறுபாடான கருத்துக்களையோ இரு மாநில மக்களுடையே நல்லெண்ணங்களுக்கு ஊறுதேடுகிற நிலைகளையோ உருவாக்கக்கூடாது என்பதற்காகத்தான், சட்டப்படி காரியங்கள் நடைபெறவேண்டும் என்ற அந்த நோக்கத்திலே இந்த அரசு ஈடுபட்டு வருகின்றது. அதிலே இம்மியும் பிறழாமல் இந்த அரசு நடைபோடும் என்பதைத் தெரிவித்துக்கொண்டு, காவிரிப் பிரச்சினைக்கு நல்ல முடிவைக் காண்பதற்கு இன்றுள்ள மத்திய அரசு முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை இங்கே எழுப்பப்பட்ட இந்தப் பிரச்சினையின் அடிப்படையிலே நான் மத்திய அரசுக்கு வைத்து, இந்த அளவில் அமைகின்றேன்.

894.8115 TAN