பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

காவிரிப் பிரச்சினை மீது

உரை : 2

நாள் : 13.09.1969

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, 1974-ம் ஆண்டோடு நாம் செய்து கொண்டிருக்கிற 1924-ம் ஆண்டைய உடன்பாடு முடிவடைகிறது என்ற தவறான கருத்தை அடிப்படையாக வைத்து மாண்புமிகு உறுப்பினர்கள் பேசத் தேவையில்லை. ஏனென்றால் 1974-ம் ஆண்டோடு இந்த ஒப்பந்தம் முடிவு அடையப் போவதில்லை. 1974-ம் ஆண்டில் ஒரு மறுபரிசீலனைதான். அந்த மறுபரிசீலனையில் 'லிமிட் ப்ளோஸ்' பாதிக்கப்படாத அளவில் மறுபரிசீலனை செய்து ‘சர்ப்ளஸ் வாட்டர்’, அதிகப்படியாக வருகிற தண்ணீரை எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பதுதான் 1974-ல் வருகிற ஒப்பந்தம். ஆகவே இது சம்பந்தமாக குழப்பமான கருத்துக்களை வெளியிட வேண்டாம். 1974 ஆண்டோடு ஒப்பந்தம் தீர்ந்து விடப்போவதில்லை. அது என்றைக்கும் நிரந்தரமான ஒப்பந்தம். அதை மைசூர் அரசு தவறாகப் புரிந்து கொண்டிருப்பார்களானால் அவர்களுக்கும் உறுப்பினர்கள் கூறிய கருத்துக்களுக்கும் இதைப் பதிலாகச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இன்று தமிழக அரசுக்கும், மைசூர் அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சிக்கலைக் குறித்து அனைத்துக் கட்சியின் தலைவர்களும் இந்த மன்றத்தில் விவாதிக்கவேண்டும் என்று கூறியதற்கிணங்க இந்த விவாதம் மிகச் இந்த விவாதம் மிகச் செம்மையாக நடைபெற்றிருக்கிறது. அனைவரும் மிகுந்த எச்சரிக்கையோடு விவாதங்களை நடத்தியிருக்கிறார்கள். உணர்ச்சிக்கு முதல் இடம் தராமல், உண்மைக்கு முதல் இடம் தந்து, நம்முடைய மாண்புமிகு உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் உள்பட, இந்த விவாதத்தில் பங்கு கொண்டிருப்பது பாராட்டத்தக்கதாகும்.

இதிலே எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கொஞ்சம் காவிரியிலிருந்து பவானிக்குப் போனார்கள். எப்பொழுதுமே